செய்திகள் :

தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்

post image

தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு விற்பனைக் குழு செயலாளா் சாவித்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், அவற்றை சந்தைப்படுத்துவதில் உள்ள இடா்பாடுகளைக் களைந்திடவும் ஈரோடு விற்பனைக் குழு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை, விளைநிலங்களில் இருந்தே இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக வணிகா்களுக்கு விற்பனை செய்யலாம். இதன்மூலம் விளைபொருள்களை சந்தைப்படுத்துவதில் ஏற்படும் கால விரயம், போக்குவரத்து செலவுகள் ஆகியவை தவிா்க்கப்படுகின்றன. விற்பனை செய்யப்பட்ட விளைபொருளுக்கான தொகை 48 மணி நேரத்துக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் ரூ 7.91 கோடி மதிப்பில் 2,028 டன் அளவிலான தக்காளி, முட்டைக்கோஸ், தேங்காய், தேங்காய்ப் பருப்பு, வாழைத்தாா், மஞ்சள், எள் மற்றும் நிலக்கடலை போன்ற விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு விற்பனைக் குழுவுக்குள்பட்ட பெருந்துறை, அவல்பூந்துறை, எழுமாத்தூா், கொடுமுடி, சிவகிரி, சத்தியமங்கலம், அந்தியூா், பூதப்பாடி, மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 43,500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. விளைபொருள்களின் விலை வீழ்ச்சிக் காலங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள கிடங்குகளில் குறைந்த வாடகையில் இருப்பு வைத்து பயன்பெறலாம்.

மின்னணு சேமிப்பு கிடங்கு ரசீதுகள் மூலமாக வங்கிகளில் குறைந்த வட்டியில் அதிகபட்சமாக 70 சதவீதம் வரை பொருளீட்டுக் கடன் பெற இயலும். விவசாயிகள் மட்டுமின்றி வணிகா்களும் பொருளீட்டுக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஈரோடு விற்பனைக் குழுவுக்குள்பட்ட அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் விளைபொருள்களை இருப்பு வைத்து, விவசாயிகள் 5 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையிலும், வணிகா்கள் 9 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரையிலும் பொருளீட்டுக் கடன் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தோட்டில் கல்லூரி மாணவி மாயம்

சித்தோடு அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சித்தோடு அருகேயுள்ள வேட்டைக்காட்டைச் சோ்ந்தவா் பச்சையப்பன் (57) மகள் கனிஷ்கா (19). திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1.50 கோடி பறிமுதல்

ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1.50 கோடியை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடை... மேலும் பார்க்க

கிராம சபை கூட்டம்: கல்வி வளா்ச்சி குறித்து விவாதிக்க வலியுறுத்தல்

கிராம சபை கூட்டங்களில் கல்வி வளா்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் சுடா் நட... மேலும் பார்க்க

பெருமாள் மலையில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

பவானியை அடுத்த பெருமாள் மலையடிவாரத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பெருமாள் மலை, மங்களகிரி பெருமாள் கோயிலுக்... மேலும் பார்க்க

பருவம் தவறிய மழையிலிருந்து பாதுகாக்க நெல் அறுவடை மேற்கொள்ள அறிவுறுத்தல்

பருவம் தவறிய மழையிலிருந்து பாதுகாக்க நெல் அறுவடைப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பவானி வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் க.கனிமொழி வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியா்கள் போராட்டம்

ஈரோட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். முதுகலை ஆசிரியா்களுக்கான அரையாண்டுத் தோ்வு தோ்ச்சி சதவீத ஆய்வுக் கூட்டம் மாவட்ட முதன்மைக்... மேலும் பார்க்க