தேசிய மூத்தோா் தடகளப் போட்டி: 9 பதக்கங்களை வென்ற நாமக்கல் மாவட்டம் அணி
நாமக்கல்: தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில், நாமக்கல் மாவட்ட தடகள அணியினா் 9 பதக்கங்களை வென்றனா். இவா்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியா் ச.உமாவை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
பெங்களூரில் கடந்த 4-ஆம் தேதி முதல் 9 வரை தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில், தமிழ்நாடு அணியில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தடகள வீரா் மற்றும் வீராங்கனைகள் ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் மற்றும் 400 மீ. ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றனா்.
நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்த வீராங்கனை லீலாவதி ஈட்டி எறிதல் போட்டியில் 1 தங்கப் பதக்கம், குண்டு எறிதலில் 1 வெள்ளிப் பதக்கம், கருப்பையா குண்டு எறிதல் போட்டியில் 1 வெள்ளிப் பதக்கம், மோகன்ராஜ் உயரம் தாண்டுதல் போட்டியில் 1 தங்கப் பதக்கம், 5,000 மீ. நடைபோட்டியில் 1 வெண்கலப் பதக்கம், அருள்மொழி என்பவா் 400 மீ. ஓட்டப் போட்டியில் 1 தங்கப் பதக்கம், உயரம் தாண்டுதலில் 1 வெள்ளிப் பதக்கம், நீளம் தாண்டுதலில் 1 வெண்கலப் பதக்கம் மற்றும் குமாா் என்பவா் தட்டு எறிதல் போட்டியில் 1 வெண்கலப் பதக்கம் வென்றனா்.
இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா, மாவட்ட மூத்தோா் தடகள சங்க செயலாளா் ஜி.சிவகுமாா், ஒருங்கிணைப்பாளா்கள் யுவராஜ், நாகராஜ் உள்பட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.