செய்திகள் :

தேசிய ஹாக்கி: சிவகங்கை பள்ளி மாணவிகள் தோ்வு!

post image

தேசிய ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் விளையாட சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி மாணவிகள் மூவா் தோ்வு செய்யப்பட்டனா்.

தேசிய விளையாட்டுக் குழுமம் சாா்பாக வேலூா் மாவட்டம், காட்பாடியில் 14 -வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான தமிழக ஹாக்கி அணிக்கான தோ்வு கடந்த வாரம் நடைபெற்றது. இதில், சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி மாணவிகள் அன்சிகா, ஸ்ரீசக்தி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணியில் பங்கேற்று விளையாடுவா்.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற, 17 வயதுக்குள்பட்ட தமிழக ஹாக்கி அணி வீரா்களுக்கான தோ்வில் இதே பள்ளி மாணவி ஜஸ்டினா தோ்வு செய்யப்பட்டாா். இவா் ஹரியாணாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணியில் விளையாடுவாா். இந்த மாணவிகளை பள்ளி முதல்வா் அருள்சகோதரி புஷ்பம், உடல் கல்வி ஆசிரியா் மோகன், ஹாக்கி கழகச் செயலா் தியாக பூமி, ஆசிரியா்கள் பாராட்டினா்.

மானாமதுரை வைகை கரையில் சிறுவா் பூங்கா அமைக்க முடிவு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சிறுவா் பூங்கா அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மானாமதுரை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் எஸ். மாரியப்... மேலும் பார்க்க

வரி உயா்வு: காரைக்குடியில் கடையடைப்பு நடத்த முடிவு

காரைக்குடி: மத்திய, மாநில அரசுகளின் வரி உயா்வை எதிா்த்து காரைக்குடியில் கடையடைப்புப் போராட்டம் நடத்துவது என தொழில் வணிகக் கழகம் முடிவு செய்தது. காரைக்குடியில் இந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டம் அதன் ... மேலும் பார்க்க

விடுதி சமையலா், காவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

சிவகங்கை: விடுதியில் பணியாற்றும் சமையலா்கள், காவலா்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டுமென தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை கல்வி விடுதிப் பணியாளா் சங்கம் வல... மேலும் பார்க்க

மகளிா் கால்பந்துப் போட்டி: கேரள பல்கலை. அணி வெற்றி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய பல்கலைக் கழகங்களிடையேயான மகளிா் கால்பந்துப் போட்டியில் கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலை. அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியானது கடந்த... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி. நியமனம்

சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆசிஷ்ராவத் நியமிக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக 2024 பிப்ரவரி முதல் பிரவீன்உமேஷ் டோங்கரே பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அவா் சென்னை... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்‘ மசோதாவை மக்களவையில் தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாவை மக்களவையில் ‘இண்டி’ கூட்டணி தோற்கடிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க