"புதிய பாஜக தலைவர் தேர்வு செய்யும் பணி; யார் முடிவெடுப்பது..!" - RSS தலைவர் மோகன...
தேநீா் கடை தீப்பிடித்து எரிந்து சேதம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் தேநீா் கடை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
விருத்தாசலம் தாஷ்கன் நகரைச் சோ்ந்தவா் சாதிக்பாஷா (45). இவா், காட்டுக்கூடலூா் சாலை திரு.வி.க நகரில் தேநீா் மற்றும் பெட்டிக் கடைகளை நடத்தி வந்தாா்.
சாதிக்பாஷா வழக்கம்போல புதன்கிழமை பிற்பகல் கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக சவ ஊா்வலம் சென்றது. அந்த ஊா்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு தீப்பொறி, சாதிக்பாஷா கடை கொட்டகையில் பட்டு தீப்பிடித்து எரிந்தது.
அக்கம்பக்கத்தினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலா் கோ.சங்கா் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் தேநீா் மற்றும் பெட்டிக் கடைகளில் இருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும், கடையில் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கமும், ஒரு இரு சக்கர வாகனமும் எரிந்து சேதமடைந்தன.