செய்திகள் :

தேனி: செம்பு பாத்திரத்தை, இரிடியம் எனக் கூறி ரூ.10 லட்சம் `அபேஸ்' - திரைப்பட பாணியில் நடந்த மோசடி!

post image

சதுரங்க வேட்டை பாணியில் இரிடியம் விற்பனை மோசடியில் தேனி மாவட்டம், சின்னமனூர், போடி பகுதியைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தேனி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சின்னமனூர் பகுதியில் இருந்து காரில் இரிடியம் கடத்தி வருவதாக ஆண்டிபட்டி போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனபடிப்படையில், ஆண்டிபட்டி போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

சதுரங்க வேட்டை பாணியில் மோசடி

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் 2 கார்களில் வந்தவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து, கார்களை போலீஸார் சோதனை செய்தனர். காரில் இருந்த பெட்டியில் இரிடியம் இருப்பதாகவும், பூஜை செய்த பிறகே பெட்டியை திறக்க வேண்டும் எனக் கூறியதால், காரில் வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி தக்கலையைச் சேர்ந்த ஜஸ்டின் ஜெயக்குமாரிடம், ''இரிடியம் விற்பதாக மோசடி செய்துவிட்டனர்'' எனப் புகார் பெற்று, தேனியைச் சேர்ந்த 2 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், ``தேனியைச் சேர்ந்த குமார், ராஜேஸ் ஆகியோர் எங்களிடம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் இருப்பதாகவும், அதை 10 லட்சம் ரூபாய்க்கு கொடுப்பதாகவும் கூறினர். இதை நம்பி கண்டமனூர் விலக்கு அருகே உள்ள தங்கும் விடுதியில் வைத்து இரிடியத்தை 9.5 லட்ச ரூபாயை குமாரிடம் கொடுத்து வாங்கினேன். இரிடியம் என செம்பு பாத்திரத்தை கொடுத்தபோது, ராஜேஸ் என்பவர் இது இரிடியம் தான் மதுரைக்கு கொண்டு வாருங்கள் கம்பெனியில் வைத்து பேசிக் கொள்ளலாம் எனக் கூறி ஏமாற்றி, தப்பிவிட்டனர்" எனக் கூறியுள்ளார்.

மோசடி

போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`வனப்பகுதியில் நின்ற காரில் ரூ.11 கோடி பணம், 52 கிலோ தங்கம்’ - கான்ஸ்டபிள் பில்டர் ஆனது எப்படி?

மத்திய பிரதேசத்தில் கடந்த 19-ம் தேதி மந்தோரி வனப்பகுதியில் கேட்பாரற்று நின்ற காரில் ரூ.11 கோடி பணம், 52 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த ஆயுதங்களுடன் அவற்றை அடர்ந்த வனப்பகுதி வழியாக கொ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைகழகம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி - கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியும், மாணவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு இருவரும் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தப... மேலும் பார்க்க

விருதுநகர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை... என்ன நடந்தது?

மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்ட கிளை நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்துார்: கடன் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி; கணவன், மனைவி கைது!

விருதுநகர் மாவட்டத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக கணவன்-மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போ... மேலும் பார்க்க

சென்னை: விமான நிலையத்தில் தொடரும் உயர்ரக கஞ்சா கடத்தல் - சிக்கிய ’குருவிகள்’ - நீளும் விசாரணை

பாங்காக்கிலிருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், போதைப்பொருள்கள் அதிகளவில் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வருவாய... மேலும் பார்க்க

`வழிப்பறி முதல் போதைப்பொருள் வரை’ - குற்றச் செயல்களில் ஈடுபடும் போலீஸ் எண்ணிக்கை அதிகரிப்பா?

போதை பொருள் விற்பனையும் சிக்கிய காவலரும்!தமிழகம் முழுவதும் போதைப் பொருள்களின் விற்பனை படுஜோராக நடந்து வருவது காவல்துறையினருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. போதை பொருள் விற்பனையைத் தடுக்க தனிப... மேலும் பார்க்க