தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்
கொடைக்கானலில் தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்த 500 பழங்குடியினா்களுக்கு சான்றிதழ், தேனீ பெட்டிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கதா், கிராமத் தொழில்கள் ஆணைய மதுரைக் கோட்ட அலுவலகத்தின் இயக்குநா் செந்தில்குமாா் ராமசாமி தலைமை வகித்தாா். இதில் கதா், கிராமத் தொழில்கள் ஆணைய தென் மண்டல முதன்மைச் செயல் அலுவலா் மதன்குமாா் ரெட்டி கலந்து கொண்டு தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்த பழங்குடியினா்களுக்கு தேனீ பெட்டி, சான்றிதழ்கள் வழங்கிப் பேசினாா்.