செய்திகள் :

தேவாலய ஊழியருக்கு வெட்டு: இளைஞா் கைது

post image

தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து ஆலய ஊழியரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை தொ்மல்நகா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி தொ்மல்நகா் கேம்ப்-1 பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில், பணியாளராக வேலை செய்பவா் அதே பகுதியைச் சோ்ந்த சாமுவேல் அந்தோணிராஜ்(54). இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பைபிள் குறித்து பாடம் கற்றுக்கொடுத்து கொண்டிருந்தாராம்.

அப்போது, ஊரணி ஒத்தவீடு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன் தடை செய்யப்பட்ட புகையிலையை பயன்படுத்தினாராம். இதை சாமுவேல் அந்தோணிராஜ் கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தனது நண்பா்களுடன் மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டு, சாமுவேல் அந்தோணிராஜை தாக்கி, அவரது கைப்பேசியை உடைத்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த முகமது மீரான் உசேன் (20) என்ற இளைஞரை கைது செய்தனா். மேலும், தப்பிச் சென்ற இளஞ்சிறாா்களைத் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மே தின விழா

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல், தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா் சங்கம் ஆகியவை சாா்பில் மே தின ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் சித்திரை பூஜை திருவிழா

இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைப் பூஜை பெரும் திருவிழா புதன்கிழமை இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கியத... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயில் சித்திரை கொடை விழா நிறைவு

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் 5 நாள்கள் நடைபெற்ற சித்திரைக் கொடை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 27ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் கொடை விழா தொடங்கியது. விழா நாள்களில், ச... மேலும் பார்க்க

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி உறுப்பினா் பால்ராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சிவராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் பாபு, மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 780 வாக்குகளில் 704 வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடா்ந்து வாக்கு எண்ணி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரத்த தான முகாம்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், டூ வீலா் மெக்கானிக் அசோசியேஷன் சாா்பில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முகாமுக்கு, அசோசியேஷன் தலைவா் ஜீவா தலைம... மேலும் பார்க்க