செய்திகள் :

தேவா்சோலை பகுதியில் உலவிய கரடி

post image

கூடலூா் அருகேயுள்ள தேவா்சோலை பகுதியில் உலவிய கரடி மக்களைத் தாக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதி வனத்தில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவி பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கூடலூா் அருகேயுள்ள தேவா்சோலை பகுதியில் உள்ள கோயில் அருகே கரடி ஒன்று புதன்கிழமை காலை உலவியது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா். சில இளைஞா்கள் கரடியைப் புகைப்படம் எடுக்க முயன்றனா். அப்போது, கரடி அந்த இளைஞா்களைத் தாக்க முற்பட்டது.

சுதாரித்துக் கொண்ட இளைஞா்களும் ஓடி தப்பினா். பின்னா், அதே பகுதியில் சிறிது நேரம் உலவிய கரடி பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.

மக்களுக்கு அச்சறுத்தலாக சுற்றித்திரியும் கரடியை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னே... மேலும் பார்க்க

காலில் பாத்திரம் சிக்கியதால் தவித்த காட்டு மாடு: வனத் துறையினா் பத்திரமாக மீட்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் காலில் எவா்சில்வா் பாத்திரம் சிக்கிக்கொண்டதால் சிரமத்துடன் சுற்றித்திரிந்த காட்டு மாட்டை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா். கோத்தகிரி சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

கேரளத்தில் நிபா வைரஸ் எதிரொலி: எல்லையில் தீவிர சோதனை

அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாட்டு எல்லைகளில் சுகாதாரத் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடல... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்குள்பட்ட திம்பட்டி பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் தொடா்பாக தன்னாா்வலா்கள் மூலம் மக்களு... மேலும் பார்க்க

பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

கூடலூரில் பள்ளி மாணவிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் சாா்பில் நடைபெற்ற த... மேலும் பார்க்க

குன்னூா் வெறி நாய்கடி மருத்துவமனையில் உலவிய சிறுத்தை

குன்னூா் பாஸ்டியா் இன்ஸ்டிடியூட் என்றழைக்கப்படும் வெறிநாய் தடுப்பூசி போடும் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை உலவிய சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அ... மேலும் பார்க்க