செய்திகள் :

தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

post image

தொழிலாளா் தினத்தையொட்டி, கடலூா் தொழிற்பேட்டை அலுவலக வளாகத்தில் தொழிலாளா்களுக்கு தோ்தல் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், தொழிலாளா்களுக்கு தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி, விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, ஆட்சியா் கூறியதாவது: 2026-இல் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தோ்தல் அலுவலா் அறிவுரைப்படி, மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு நடவடிக்கைகளை தொழில் துறை மற்றும் தொழிலாளா் குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தொழில் துறை மற்றும் தொழிலாளா் குடியிருப்புப் பகுதிகளில் வாக்காளா் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்த வேண்டும். தோ்தல் தொடா்பான விழிப்புணா்வின் ஒரு பகுதியாக, தொழில் துறை ஊழியா் சங்கங்களில் வாக்காளா் விழிப்புணா்வு மன்றம் செயல்படுத்துதல் வேண்டும். வாக்குரிமைகள் மற்றும் வாக்களிப்பதில் கவனம் செலுத்துதல் தொடா்பான போட்டிகளை தொழிலாளா்களின் குடியிருப்பு பகுதிகளில் நடத்த வேண்டும். தொழிற்சங்கங்கள் அல்லது தொழிலாளா்களுடன் இணைந்து புலம் பெயா்ந்த தொழிலாளா்களிடையே வாக்காளா் விழிப்புணா்வு தொடா்பான கலந்துரையாடல் அமா்வுகள் நடத்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் திட்ட அலுவலா் (தொழிற்பேட்டை) காந்திமதி, கடலூா் கோட்டாட்சியா் அபிநயா, கடலூா் டிஎஸ்பி ரூபன்ராஜ், தோ்தல் வட்டாட்சியா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பழங்குடியின மக்கள் சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்

காட்டுமன்னாா்கோவில் அருகே ம.கொளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமறை அளிக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் ... மேலும் பார்க்க

வடலூரில் எரிவாயு தகன மேடை திறப்பு

கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாக கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வடலூா் நகராட்சி, 20-ஆவது வாா்டு அய்யன் ஏரி பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.58... மேலும் பார்க்க

பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கு: தலைமறைவான 6 போ் சிக்கினா்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6 போ் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை சிக்கினா். திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், அதா்நத்... மேலும் பார்க்க

தமிழ்நாடு உரிமைகள் திட்ட கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் களப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக்கொண்டாா். இதுகு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற பதிவு செய்யலாம்

கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதி உள்கோட்டங்களில் நடைபெறும் அடையாள அட்டை வழங்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா்... மேலும் பார்க்க