இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
தைவான் ஷூ உற்பத்தியாளர்களைத் தமிழ்நாடு ஈர்த்தது எப்படி?
தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பி ஜெயலட்சுமிக்கு சுமார் 15 மாதங்களுக்கு முன்பு வரை வாழ்க்கை துன்பமானதாகதான் தோன்றியது. தையல் தொழிலாளியான அவரது கணவரால், குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான அளவு சம்பாதிக்க இயலவில்லை அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தங்களது கூட்டுக் குடும்பத்தையே சார்ந்து இருந்தனர். இதனால் அவரது மாமியார் அவரை மோசமாக நடத்தினார்.சண்டை இல்லாமல் ஒரு நாள் கூட கழிந்ததில்லை. தனது 30 ஆம் வயதிலேயே சிறந்த வாழ்க்கைக்கான அனைத்து நம்பிக்கையையும் ஜெயலட்சுமி கைவிட்டிருந்தார்.

2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தனது ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள எறையூரில் ஒரு ஷூ உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்க இருப்பது அவருக்கு தெரிய வந்தது. அந்த தொழிற்சாலையில் வேலை செய்ய பெண் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று அவர் கேள்விபட்டார்.
ஜெயலட்சுமி படித்திருந்ததோ 9ஆம் வகுப்பு வரை மட்டுமே இதற்கு முன்பு வேறெங்கும் வேலை பார்த்த அனுபவமும் இல்லை இந்த நிலையில்தான் அவர் அந்த ஷூ கம்பெனியில் வேலைக்கு சேர விண்ணப்பித்தார் ஆனாலும் அவரை அந்த ஷூ தொழிற்சாலை வரவேற்றது. அவர் இதுவரை அறிந்திடாத ஒரு புதிய பாதையை அவருக்கு காட்டியது.
இன்று, அதே ஜெயலட்சுமி அமெரிக்காவின் பிரபல காலணி பிராண்டான CROCS ஷூக்களை தயாரிக்கும் JR One Kothari Footwear தொழிற்சாலையில் பணிபுரிவதன் மூலம் மாதம் ரூ.9.000 சம்பாதிக்கிறார்.
இப்போது என் குடும்பத்தில் பணப் பிரச்னை இல்லை. இதனால் எனக்கு நிறைய மரியாதை கிடைக்கிறது' என்று அவர் கூறுகிறார். அவர் மேலும் சற்று உணர்ச்சி வசப்பட்டு, கடந்த கால மோசமான நாட்களை நினைவு கூர்ந்த அவர் பொருளாதார நிலையுடன் சேர்ந்து தனது மாமியாரின் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். "என் மாமியார் இப்போதெல்லாம் என்னிடம் அனுசரனையுடன் நடந்து கொள்கிறார் எனவும் தெரிவிக்கிறார்.
அதே வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயா, அவ்வப்போது கடன் கேட்பதால், அவரது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்பட்டார். விவசாயக் கூலிகளாக இருந்த அவரும் அவரது கணவரும் மாதம் ரூ.5,000த்தை சம்பாதிக்கவே கஷ்டப்பட்டனர். ஆறு பேர் கொண்ட குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய சிரமப்பட்டனர். ஜெயா தற்போது JR One Kothari Footwear-ன் கேண்டீனில் பணியில் சேர்ந்துள்ளார். அவர் மாதம் ரூ 10,000 சம்பாதிக்கிறார் அவரது அக்கம் பக்கத்து வீட்டார் இப்போதெல்லாம் அவரிடம் கனிவுடன் பேசுகின்றனர். அவர்களில் சிலர் ஜெயாவிடம் சிலசமயம் கடனுதவியும் கேட்கின்றனர்.

தொழில்மயமாக்கல் நடவடிக்கை நகரமல்லாதக் கிராம பகுதிகளுக்கும் விரிவடைவதால் ஜெயலட்சுமியும் மற்றும் ஜெயாவும் தங்களை வலிமையானவர்களாக உணர்கிறார்கள். தமிழ்நாடு ஒரு உற்பத்தி மையமாக திகழ்ந்தாலும் அதன் அனைத்து மாவட்டங்களும் இதனால் பயன்பெறுவதில்லை. மின்னணுவியல், ஆட்டோமொபைல் மற்றும் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள் பெரும்பாலும் சென்னை, கோயம்புத்தூரைச் சுற்றியே குவிந்துள்ளன.
இப்போது மாநில அரசு அதன் தொழில்துறை நிலப்பரப்பை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரமாக்கியுள்ளது. தோல் அல்லாத காலணிகள் அல்லது சிந்தெட்டிக் காலணிகள் உற்பத்தி என்பது கவனம் செலுத்த வேண்டிய ஒரு பகுதியாக உருவெடுத்துள்ளது.
மேம்பட்ட மின்னணுவியல் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற அதிநவீன தொழில்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் இன்னும் சில பகுதிகளில் தொழில்மயமாக்கல் தேவைப்படுகிறது. எளிமையான உடல் உழைப்பின் மூலம் செய்யக்கூடிய வேலைவாய்ப்புகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியானது.
அத்தகையத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு துறையாகும். அதனால்தான் நாங்கள் அதில் பெரிய அளவில் கவனம் செலுத்துகிறோம். என்று தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி ஆர்.பி. ராஜா கூறுகிறார்.
வெளிநாட்டை சேர்ந்த தோல் அல்லாத பொருட்களின் உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டில் சுமார் ரூ.17,550 கோடி முதலீடு செய்துள்ளனர். இது 2,30,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் இந்தியாவின் 'சீனா+1' உத்தியை செயல்படுத்தும் ஒரு துறையாக தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி துறை வளர்ந்து வருகிறது.
மேலும் அமைச்சர் டி ஆர்.பி ராஜா கூறுகையில்Nike, Puma, Crocs, Adidas போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து தருவதன் மூலம் தமிழ்நாடு தற்போது உலகளவில் முக்கிய மையமாக உள்ளது' என்கிறார். இன்று உலகளவில் பயன்படுத்தப்படும் காலணிகளில் தோல் அல்லாத காலணிகளின் பயன்பாடு 86% ஆகும்.

ஆனால் இந்தியாவின் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் மையமாக தமிழ்நாட்டை மாற்றுவது எளிதானது அல்ல இந்த துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைப்பதும் உள்ளூர் தொழில்முனைவோரின் கவனத்தை வழக்கமான தோல் உற்பத்தியில் இருந்து மாற்றுவதும் ஒரு சவாலானதாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் 47% பங்காற்றுவது தமிழ்நாடுதான் தோல் அல்லாத காலணி உற்பத்திக்குத் தேவையான சூழலை கட்டமைப்பது இதனால் மேலும் சவாலாக அமைந்தது.
துவக்கம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள JR One Kothari Footwear தொழிற்சாலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படத் தொடங்கியது. தற்போது 2500 தொழிலாளர்கள் இங்கே பணிபுரிகின்றனர். அவர்களில் 90% பேர் பெண்கள் இது இதுவரை இந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்காக 2 மில்லியன் ஜோடி Cioes ஷூக்களை உற்பத்தி செய்துள்ளது. ரூ.X₹1.700 கோடி மொத்த முதலீட்டில் இதனை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து முதலீடுகளும் பயன்படுத்தப்படும்போது. இந்த தொழிற்சாலை 15,000 தொழிலாளர்களுடன் ஒரு ஆண்டுக்கு 40 மில்லியன் ஜோடி Crocs ஷூக்களை உற்பத்தி செய்யும் என்று கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனத்தின் தலைவர் ஜே. ரஃபிக் அகமது கூறியுள்ளார். JR One Kothari Footwear நிறுவனமானது KICL மற்றும் தைவானை சேர்ந்த Shoe Town குழுமம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். Shoe Town குழுமம் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஷூக்களை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து வருகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் KICL நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்துள்ளது அதன்படி தமிழ்நாட்டில் Adidas ஷூக்களை தயாரிப்பதற்காக ரூ 5,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதுவும் Shoe Town குழுமத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் ஒரு கூட்டு முயற்சியாகும். கரூர் நகரத்திற்கு அருகில் உள்ள மாயனூரில் அமைக்கப்பட இருக்கும் இந்த தொழிற்சாலையால் கூடுதலாக 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இன்று, தோல் அல்லாத காலணிகளின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஒப்பந்த உற்பத்தியாளர்களும் (Pow Chan குழுமம், Hong Fu குழுமம், Dean Shoes குழுமம்) தமிழ்நாட்டில் தங்களது உற்பத்தி தளங்களை அமைப்பதில் முனைப்பை காட்டி வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு செய்யாறில் ஒரு தொழிற்சாலையுடன் தமிழ்நாட்டில் நுழைந்த Nike-ன் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளர்களில் ஒன்றான Feng Tay Enterprises சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூரிலும், திண்டிவனத்திலும் தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.

Feng Tay Enterprises 37,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தி, ஆண்டுதோறும் சுமார் 25 மில்லியன் ஜோடி ஷூக்களை உற்பத்தி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் யாரும் அறியாத விஷயம் என்னவென்றால் இந்தியா 25 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உற்பத்தியாளர்களை ஈர்த்திருக்க முடியும். ஆனால் அது அவ்வாறு செய்யவில்லை. I
தவற விட்ட வாய்ப்பு
1980களில் உலகளவில் ஷூக்களை உற்பத்தி செய்யும் முக்கிய நிறுவனங்கள் தோல் அல்லாத ஷூக்களின் உற்பத்தியை சீனாவிற்கு மாற்றின குறைந்த ஊதியம் மற்றும் ஏராளமான தொழிலாளர்களின் கிடைக்கும் தன்மை ஆகியவை இதற்கு காரணமாக அமைந்தன. உலகளாவிய ஷூ உற்பத்தியாளர்கள் தங்கள் தேவைக்காக, மற்ற இடங்களைத் தேடத் தொடங்கினர். அப்போது இந்தியாவிற்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இதனை பயன்படுத்திக்கொள்ள இந்தியா தயாராக இல்லை. கொள்கை வகுப்பாளர்களும் தொழில்முனைவோரும் தோல் பொருட்கள் உற்பத்தியிலேயே கவனம் செலுத்தினர் தாய்லாந்து, வியட்நாம். இந்தோனேசியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் பல முன்னணி ஷு உற்பத்தி நிறுவங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தியதால் அவை பயனடைந்தன. இந்தியாவில் முதலீடு செய்த ஒரே நிறுவனம் Feng Tay மட்டுமே. இந்நிறுவனத்தின் செயல்பாடுகளும் குறைந்த அளவிலேயே இருந்தன.
தலைகீழ் மாற்றம்
தற்போது இந்தியாவிற்கு இரண்டாவது வாய்ப்பை பல காரணிகளின் சேர்க்கை வழங்கியுள்ளது. தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியாவில் வேலைசெய்யும் வயதுடையோர் குறையத் தொடங்கியதுடன். ஊதியங்களும் உயரத் தொடங்கியுள்ளன. இன்று. சீனாவில் ஷூக்கள் தயாரிப்புத் துறையில் ஊதியச் செலவு ஒரு மணி நேரத்திற்கு டாலராகவும், வியட்நாமில் ஒரு மணி நேரத்திற்கு 2 டாலராகவும், இந்தோனேசியாவில் 1.5 டாலராகவும் உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் ஊதியச் செலவு 90 செண்ட்களாக உள்ளது "இந்த ஊதிய வேறுபாடு இந்தியாவிற்கு பெரிய ஈர்ப்பாக உள்ளது" என்று கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ரஃபீக் அகமது கூறுகிறார்.
மேலும் கடந்த எட்டு ஆண்டுகளில் வினியோகச் சங்கிலிகளில் பல இடையூறுகள் இருந்தன 2017 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் முதல் முறை பதவியேற்ற காலத்தில் நடந்த அமெரிக்க-சீன வர்த்தகப் போர், அமெரிக்கா சீனாவை அதிகமாகச் சார்ந்திருப்பதை வெளிக்காட்டியது பின்னர் கோவிட் 19 தொற்று பரவியபோது அது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீர்குலைத்தது.
இந்நிலையிலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சிப் பாதையில் இருந்தது தனிநபர் வருமானம் அதிகரித்து வருவது உலகளாவிய நிறுவனங்களை இந்தியாவை தீவிரமாகக் கருத்தில் கொள்ள வைத்தது. இந்தியாவுக்கு இணையான பொருளாதாரத்தை கொண்ட பிற நாடுகளை விட, இந்தியாவில் தோல் அல்லாத ஷூக்களின் பயன்பாடு மிகக் குறைவாக இருந்தது இது வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது.
இந்தியாவிற்கு கிடந்த இந்த இரண்டாவது வாய்ப்பை தமிழ்நாடு முதலில் பயன்படுத்திக் கொண்டது. தோல் அல்லாத ஷூ உற்பத்தி துறையின் வளர்ச்சி தமிழகத்தின் முதலீட்டை ஊக்குவிப்பதாக TNAIP தலைமை நிர்வாக இயக்குநர் டே ரெஸ் அகமது சுட்டிக்காட்டுகிறார். முதலீட்டாளர்கள் நகரங்களிலிருந்து விலகி கிராமப்புறங்களில் தொழிற்சாலைகளை அமைக்க விரும்பினர். அவர்களின் ஒரே கோரிக்கை துறைமுகத்தை எளிதாக சென்றடைவதாகும்.
'தமிழ்நாடு சமமாக வளர்ச்சியடைந்துள்ளது. சாலைகள் மற்றும் மின்சாரம் போன்ற நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது எட்டு மணி நேரத்திலோ அல்லது அதற்கும் குறைவான நேரத்திலோ துறைமுக இணைப்புடன் கூடிய கிராமப்புறங்களில் Qมไม நிலங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்க முடியும் என்று தமிழ்நாட்டின் தொழில்துறை செயலாளர் வி.அருண் ராய் தெரிவிக்கிறார் மேலும் தொழிலாளர்கள் குறிப்பாக முதலீட்டாளர்கள் வேலைவாய்ப்பில் வாய்ப்பில் முன்னுரிமை தர நினைக்கும் பெண் தொழிலாளர்கள் உடனடியாகக் கிடைக்கின்றனர் என்று கூறுகிறார்.
ஷூக்களால் நிரப்பினோம்..
வலுவான காரணங்கள், முதலீடுகளை ஈர்க்கக் கூடிய அரசு, நல்ல உள்கட்டமைப்பு இருந்தபோதிலும், உலகளாவிய முதலீட்டாளர்களை நம்ப வைப்பது எளிதல்ல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை போலவே கிட்டத்தட்ட அனைத்து தோல் அல்லாத காலணிகளும் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை மேலும் இந்தத் துறை Pou Chan, Hong Fu. Fen Tay, Dean Shoes போன்ற ஒரு சில தைவானிய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இந்தக் நிறுவனங்களுக்கு இந்தியாவைப் பற்றிய அனுபவம் குறைவாகவே இருந்தது மேலும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் ஏற்கப்படும் முறை, பணியாளர்களின் தரம், அதிகாரத்துவ ஊழல்கள் குறித்து அவர்களுக்கு கவலைகள் இருந்தன.

2018 முதல் தமிழ்நாடு அரசு தைவானிய ஒப்பந்த உற்பத்தியாளர்களை பெரிய அளவில் கவர்ந்திழுக்கத் தொடங்கியது. கோவிட்-19க்குப் பிறகு மேலும் இந்த முயற்சிகள் தீவிரமடைந்தன” என்று இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ் கிருஷ்ணன் கூறுகிறார். முன்னதாக, அவர் தமிழ்நாட்டின் தொழில்துறை செயலாளராக இருந்தபோது தோல் அல்லாத காலணிகளை தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கி வைத்தார்.
தைவான் காலணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (Tafma) உறுப்பினர்களைச் சந்திக்க மாநில அதிகாரிகள் தைவானுக்கு பலமுறை சென்று வந்ததை அவர் நினைவு கூர்ந்தார். Tafma-வின் ஒரு தூதுக்குழு தமிழ்நாட்டிற்கு அழைக்கப்பட்டது; முதலீட்டாளர்களின் மாநிலத்தின் வெற்றிக் தொழில்துறை திறமை. கதைகள் அவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. முதலீடுகளை ஒருங்கிணைக்க கடந்த மூன்று ஆண்டுகளாக தைவான் நாட்டில் உள்ள தொழில் நகரமான தைபேயில் முழுநேர அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இந்த அதிகாரியின் பணிதோல் அல்லாத காலணி கொள்கை செப்டம்பர் 2022 இல் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது. எங்கள் கொள்கை ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஏற்றவாறு மூலதனம் நிலம் மற்றும் ஊதிய மானியங்களை வழங்குகிறது." என்று தொழில்துறை அமைச்சர் ராஜா கூறுகிறார்.
ரஃபீக் அகமது போன்ற தொழில் முனைவோர் மேற்கொண்ட முயற்சிகள் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபுரிந்தன அவர் முதலீட்டிற்காக தைவான் உற்பத்தியாளர்களை அணுகினார்.
Shoe Town குழுமத்தின் தலைவர் ரான் சாங்கிடம். JR One kothar தொழிற்சாலை ஒரு வருடத்தில் இயங்கும் I என்று நான் உறுதியளித்திருந்தேன். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் ஆண்டு விழாவின் போது ( நவம்பர் 28, 2023) எங்கள் முதல் காலணியை நாங்கள் தயாரித்தோம் என்று ரஃபிக் அகமது பெருமையாக சொல்கிறார்.
இதுபோன்ற வெற்றிகள் இந்திய சூழல் குறித்து தைவான் உற்பத்தியாளர்கள் கொண்டிருந்த சந்தேகங்களை தீர்த்து வைத்தன.
கிழக்கு ஆசியா முழுவதும் 31 தொழிற்சாலைகளை இயக்கும் Shoe Town நிறுவனம் குறைந்த உற்பத்தி செலவு, அதிக அளவிலான பணியாளர்கள் காரணமாக 'சீனா+1' உத்திக்கு இந்தியா சிறந்த தேர்வாக கருதுவதாக சமீபத்தில் சாங் சென்னைக்கு வந்தபோது ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் தமிழ்நாட்டில் எதிர்கால வணிக வளர்ச்சிக்கு நாங்கள் ஒரு பெரிய மதிப்பை உருவாக்கியுள்ளோம். என்று அவர் அந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேற்கண்ட காரணிகளே தைவான் நிறுவனங்களான Feng Tey, Foxconn, Pegatron போன்ற நிறுவனங்களின் வெற்றிக்கும் உதவின இதில் Foxconn, Pegatron ஆகியவை எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையை சார்ந்தவையாகும்.
தமிழ்நாடு தற்போது அதன் தென் மாவட்டங்களில் புதிய முதலீடுகளை செயல்படுத்த முயற்சிக்கிறது "மதுரை, கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம். தேனி, திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூரில் புதிய முதலீடுகளைக் கண்டறிவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். என்று தமிழக தொழிற்துறை செயலாளர் அருண் ராய் கூறினார்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில், மதுரை மற்றும் கடலூரில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு முதலீடுகளுடன் இரண்டு தோல் அல்லாத காலணி பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் அடி
ஒப்பந்த உற்பத்தியாளர்களை ர்த்த பிறகு, தமிழ்நாடு அரசு இப்போது ஒரு சாதகமான சூழலை உருவாக்க முயற்சிக்கிறது. ராணிப்பேட்டை மற்றும் எறையூர் காலணி பூங்காக்களில் துணை பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு இடம் ஒதுக்கியுள்ளது தோல் அல்லாத காலணிகளை தயாரிப்பதற்கான கிட்டத்தட்ட அனைத்து துணை பொருட்களும் இரசாயனங்கள் தொழில்நுட்ப ஜவுளி கொக்கிகள் மற்றும் ஓட்டும் பொருட்கள் கூட தற்போது இறக்குமதி செய்யப்படுவதால் தோல் அல்லாத காலணி உற்பத்தி சவாலானதாக உள்ளது. இவற்றை உருவாக்க தேவையான மூலப்பொருள் இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை.
உள்ளூர் உற்பத்தி குறைந்த அளவிலேயே கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகளில் 25% உள்ளூர்மயமாக்கல் இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்' என்று தொழில்துறை செயலாளர் அருண் ராய் கூறுகிறார். மேலும், லித்தியம் போன்ற அரிய மண் தாதுக்களை நம்பியுள்ள மின்சார வாகன பேட்டரிகளைப் போலல்லாமல், தோல் அல்லாத காலணிகளில் மூலப்பொருள் பெட்ரோலியம்தான்; இது எளிதில் கிடைக்கிறது என்று அவர் தெரிவிக்கிறார்.
தற்போது இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 22 துணை பொருட்கள் உற்பத்தியாளர்கள் எறையூரில் தங்களுக்கான உற்பத்தி வசதியைக் கண்டறிய ஒப்பந்தம் செய்துள்ளதாக” KICL-ன் தலைவர் ரபீக் அகமது கூறியுள்ளார் சீன முதலீடுகள் அனுமதிக்கப்பட்டு சீன மக்களுக்கு விசா வழங்கப்பட்டால் உற்பத்திக்கு சாதகமான சூழலை உருவாக்குவது வேகமாக நடக்கும். இந்திய-சீன உறவில் ஒரு மாற்றம் நிகழ்வது இதற்கு மேலும் உதவிகரமாக இருக்கும்" என்று அவர் நம்பிக்கையளிக்கிறார்.

எரையூரில் உள்ள JR one kothan ஆலையில் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் வீணாவதைக் குறைத்து தரத்தை உறுதி செய்ய பல பயிற்சி அமர்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஆரம்பத்தில், தொழிற்சாலையில் தொழிலாளர் உற்பத்தி திறன் வீணாவது 80% ஆக இருந்தது நான்கு மாத பயிற்சிக்குப் பிறகு உற்பத்தி திறன் வீணாவது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 10% க்கும் குறைவாகக் குறைந்தது என்று ரபிக் அகமது கூறுகிறார். தைவானிய உற்பத்தியாளர்களின் கடைசி பயமாக இருந்தது. இந்திய தொழிலாளர்களின் உழைப்பின் செயல்திறன்தான். தற்போது அந்த பயத்தையும் நம் தொழிலாளர்கள் போக்கிவிட்டனர்.