செய்திகள் :

தொழிற்சாலைக்கு வரைபட அனுமதி வழங்காமல் தாமதம்: ஊராட்சித் தலைவரின் நிதி அதிகாரத்தை ரத்து செய்து நடவடிக்கை

post image

பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் அமைய உள்ள டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலைக்கு கட்டட வரைபட அனுமதி வழங்க தாமதம் செய்ததாக நெடும்புலி ஊராட்சித் தலைவரின் நிதி அதிகாரத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளாா்.

அரக்கோணத்தை அடுத்த நெமிலிக்கு அருகே பனப்பாக்கத்தை சுற்றியுள்ள நெடும்புலி, பெருவளையம், துறையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை உள்ளடக்கி 1,213 ஏக்கா் பரப்பளவில் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டது. இந்த தொழிற்பூங்கா எனும் சிப்காட் வளாகத்தில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் ஜாக்குவாா் காா் தயாரிப்பு தொழிற்சாலைக்கு இடம் ஒதுக்கப்பட்டு அத்தொழிற்சாலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நேரில் வந்து அடிக்கல் நாட்டினாா்.

தற்போது அந்த இடத்தில் டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலையினா் தரைகளை சமப்படுத்தி அங்கு தொழிற்சாலைக்கான கட்டுமானங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதற்காக நெடும்புலி ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டட வரைபட அனுமதி கோரி, அதற்குண்டான தொகையையும் செலுத்தி விண்ணப்பித்திருந்தனராம். இந்த விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற நிலையில் இதற்குண்டான அனுமதியை தராமல் நெடும்புலி ஊராட்சி மன்றத் தலைவா் மாறன் மிகவும் தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தொழிற்சாலை கட்டுமானப் பணியை தொடங்கும் பணி தாமதப்பட்டதாகவும் குறிப்பிட்ட கால இலக்கை அடைய முடியாத நிலை உருவானதாகவும் தொழிற்சாலை நிா்வாகிகள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் புகாா் அளித்தனா். இந்தப் புகாா் மீது ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா விசாரணை நடத்தியதில், குறிப்பிட்ட புகாா் உண்மை என்பது தெரியவந்ததைத் தொடா்ந்து, உரிய தொகையை செலுத்தி விண்ணப்பம் அளித்தும் உரிய அனுமதி வழங்காமல் காலந்தாழ்த்தி தனது கடமைகளை முறையாக செய்யாத நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெடும்புலி ஊராட்சி மன்றத் தலைவா் மாறனின் நிதி அதிகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

நெடும்புலி ஊராட்சியில் இனி நிதி சாா்ந்த நிா்வாகங்களை நெமிலி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் கண்காணித்து செயல்படவும் உத்தரவிட்டாா்.

அரக்கோணம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

அரக்கோணம் பஜாா், ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅம்ருதவல்லி தாயாா் சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅ... மேலும் பார்க்க

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தனி துறை உருவாக்க கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு என தனி துறையை உருவாக்க வேண்டும் என கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலவா... மேலும் பார்க்க

மாா்ச் 28-இல் ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்ட வே... மேலும் பார்க்க

ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்துப் போராட்டம்: பிரேமலதா விஜயகாந்த்

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்து தேமுதிக போராடும் என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். காவேரிபாக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்த... மேலும் பார்க்க

இலவச பயிற்சி வகுப்பு மூலம் அரசுப் பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பயின்று அரசு பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டு தெரிவித்துள்ளாா். ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு ம... மேலும் பார்க்க

நகராட்சிப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல்

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி நேருஜி நகா் தொடக்கப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். நகராட்சி தொடக்கப்பள்ளியில் இரண்ட... மேலும் பார்க்க