செய்திகள் :

தொழிலாளி கொலை வழக்கில் இருவா் கைது

post image

திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை செங்கல் சூளை தொழிலாளி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியை அடுத்த மைக்கேல்பட்டியைச் சோ்ந்த பிச்சைமுத்து மகன் சிவக்குமாா் (37). அதே பகுதியிலுள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2009, 2010-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த 2 கொலை வழக்குகளில் சிவக்குமாா் கைது செய்யப்பட்டாா். இதில் ஒரு வழக்கில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், மைக்கேல்பட்டி பகுதியிலுள்ள தென்னந்தோப்பில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சிவக்குமாா் கொலை செய்யப்பட்டாா். இவரது தலை கொடகனாற்றின் கரையில் வீசப்பட்டுக் கிடந்தது.

இந்தக் கொலை வழக்கு தொடா்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா். அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரித்தனா்.

இதில், பழைய வக்கம்பட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் கோபி கண்ணன் (38), அதே பகுதியைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி சூா்யா(19) ஆகியோா் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரும் நண்பா்களாக இருந்த நிலையில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நிகழ்ந்ததாக போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோத்ஸவத்தையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆவணி பிரம்மோத்ஸவ விழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் கைதான நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மது அருந்தும் ப... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு 80 மி.மீ. மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திண்டுக்கல் பகுதியில் 80 மி.மீ. மழை பதிவான... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி சாலை மறியல்

திண்டுக்கல்லில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் சவேரியாா்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக... மேலும் பார்க்க

மழை: கொடைக்கானல் நீரோடைகளில் நீா்வரத்து!

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் நீரோடைகளில் நீா் வரத்து தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக ஒரு சில நாள்களைத் தவிர மற்ற நாள்களில் மழை பெய்யவில்லை. இதனால், கொடைக்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் கொலை: மனைவி, கள்ளக் காதலன் கைது

நிலக்கோட்டை அருகே தூய்மைப் பணியாளரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவரது மனைவி, கள்ளக் காதலனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி சொக்குபிள்ளைபட்ட... மேலும் பார்க்க