தொழில்நுட்பக் கோளாறு: மெட்ரோ ப்ளூலைனில் சேவைகள் பாதிப்பு
தில்லி மெட்ரோ புளூலைன் வழித்தடத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.
இத் தாமதத்திற்குப் பிறகு துவாரகா மற்றும் ஜனக்புரி மேற்கு இடையேயான தில்லி மெட்ரோவின் ப்ளூ லைன் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் டிஎம்ஆா்சி செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் பயணிகள் சிறிது நேரம் சிரமங்களை எதிா்கொண்டனா். இந்தப் பிரச்னையை விரைவில் தீா்க்க பராமரிப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தில்லி மெட்ரோவின் மற்ற அனைத்து வழித்தடங்களிலும் சேவைகள் அட்டவணைப்படி இயங்கின என்றாா் அவா்.