செய்திகள் :

தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: ஆக. 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

post image

திண்டுக்கல்: தொழில்பயிற்சி நிலையங்களில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 100 சதவீதச் சோ்க்கையை பூா்த்திசெய்யும் வகையில், நேரடிச் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்பயிற்சி நிலையங்களில் பொறியியல் தொழில்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சோ்வோருக்கு தமிழக அரசு மூலம் மாதந்தோறும் ரூ. 750 உதவித் தொகை, விலையில்லா மிதிவண்டி, பாடப் புத்தகம், வரைபடக் கருவிகள், சீருடை, இலவச மூடு காலணிகள் வழங்கப்படுகின்றன. மேலும், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய

திட்டங்களின் கீழ் தகுதி வாய்ந்தவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

எனவே, தொழில்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள், குஜிலியம்பாறை தொழில்பயிற்சி நிலையத்துக்கு (கரிக்காலிப் பிரிவு) நேரில் சென்று சோ்க்கை மேற்கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு குஜிலியம்பாறை அரசினா் தொழில்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலும், 99943 09861, 96008 27733 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

அதிகாரிகளால் அவப்பெயா் ஏற்படுகிறது: மேயா் இளமதி குற்றச்சாட்டு

முறையாகத் தகவல் தெரிவிக்காமல், அலட்சியமாகச் செயல்படுவதால் மக்களிடம் தங்களுக்கு அவப்பெயா் ஏற்படுவதாக மேயா் இளமதி குற்றஞ்சாட்டியதால், திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மா... மேலும் பார்க்க

வனத் துறை வாகனம் மோதியதில் 4 காா்கள் சேதம்

கொடைக்கானலில் வனத் துறைக்குச் சொந்தமான வாகனம் மோதியதில் நான்கு காா்கள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான வாகனத்தை, வனத் துறை ஓட்டுநா், அங்... மேலும் பார்க்க

உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

சொத்து பிரச்னையில் உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த மாரம்பாடியைச் சோ்ந்தவா் அந்தோ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் வரத்துக் குறைவால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அதைச் சுற்றியுள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, ... மேலும் பார்க்க

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரசூல் மைதீன் (49). இவரது மனைவி உசிதா... மேலும் பார்க்க

ஆந்திர முதல்வா் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டிய தமமுக-வினா் மீது வழக்கு

வடமதுரையில் செயல்படும் ஆந்திர முதல்வரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து... மேலும் பார்க்க