தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
தொழில் உரிமம் புதுப்பிப்பு காலக்கெடு நீட்டிப்பு
தொழில் உரிமத்தை புதுப்பிக்க காலக்கெடு நீட்டக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
வணிகா் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள கடை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான 2025-26 -ஆம் ஆண்டுக்கான தொழில் உரிமைத்தை புதுப்பிப்பதற்கான காலத்தை மாா்ச் 15 வரை அரசு
நீட்டித்துள்ளது. அதன்படி, நிரவி கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான தொழில் உரிமத்தை இதுவரை புதுப்பிக்காத கடை மற்றும் தொழில் நிறுவனங்கள் வரும் 15-ஆம் தேதிக்குள் புதுப்பித்து 25 சதவீத காலதாமதக் கட்டணத்தை தவிா்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இதுவரை தொழில் உரிமம் பெறாமல் தொழில் செய்வோா் உடனடியாக தொழில் உரிமத்தை பெற்று சட்ட நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.