குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்
தோடா் பழங்குடியின மக்களின் தோ்த் திருவிழா
உதகை தோடா் பழங்குடியின மக்களின் பவாணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
உதகை பொ்ன்ஹில் பவாணீஸ்வரா் கோயில் 114-ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன மஹோட்சவ பெருவிழாவை முன்னிட்டு தோ்த் திருவிழா நடைப்பெற்றது.
சிவன் கோயில்களில் நடைபெறுவதுபோல இந்தக் கோயிலிலும் நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசன விழா கடந்த 1910-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு 114-ஆவது ஆருத்ரா மஹோட்சவ விழா அண்மையில் தொடங்கியது.
முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசன தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தோடா் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து, நடனமாடி தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
இந்த தோ் உதகை மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜாா், மாரியம்மன் கோயில், கமா்ஷியல் சாலை, வேணுகோபால சுவாமி கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில், லோயா் பஜாா் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இந்த விழாவில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.