Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
தோட்டக் கலை விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம்
மானியத்துடன் நுண்ணீா் பாசன வசதி அமைக்க குஜிலியம்பாறை தோட்டக் கலை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக குஜிலியம்பாறை வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் பா. முத்தரசு தெரிவித்ததாவது:
விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி, கூடுதல் பயிா் சாகுபடி செய்ய பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குஜிலியம்பாறை வட்டாரத்தில், நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் குறு, சிறு விவசாயிகளுக்கு சொட்டு நீா் வசதிகளை ஏற்படுத்த 2 ஏக்கருக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 5 ஏக்கருக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, நில வரைபடம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.