10 Mistakes of Kejriwal, சபதம் வென்ற அமித் ஷா! | Elangovan Explains
நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!
நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை திருப்பூா் சுப்பையா சென்ட்ரல் பள்ளி மாணவ, மாணவியா் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்துக்கு திருப்பூா் சென்ட்ரல் பள்ளி மாணவ, மாணவியா் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். இந்தப் பயணத்தை வழிநடத்திய ரவீந்திரன், பறவையின் உருவ அளவு, உணவு பழக்கம், உடலமைப்பு மற்றும் ஒலிகள் அடிப்படையில் பறவைகளை அடையாளம் காணும் முறைகள் குறித்து பயிற்சியளித்தாா்.
மேலும், பறவைகள் தங்களை சுத்தமாக வைத்து கொள்ளும் செயல்முறைகள், வலசைக்குச் செல்லுதல் பற்றியும், பருவ நிலைகளின் தாக்கம் பறவைகளின் பயணத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது குறித்தும் மாணவா்களுக்கு விளக்கினாா்.
இதில், பங்கேற்ற மாணவ, மாணவியா் 24 வகையான பறவைகளை கண்டுகளித்தனா். பறவைகளின் சப்தங்களைக் கேட்டு அவற்றின் இனங்களை அடையாளம் காணும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயணத்துக்கான ஏற்பாடுகளை சுப்பையா சென்ட்ரல் பள்ளித் தாளாளா் சுகுமாரன் செய்திருந்தாா்.