சிட்டி யூனியன் வங்கி-சிஎஸ்கே இணைந்து புதிய கடன் அட்டை அறிமுகம்
நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 11% அதிகரிக்கும்!
நடப்பாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு கணித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவிகிதம் அதிகரித்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ. 1.68 லட்சம் கோடி வசூலான நிலையில், தற்போது ரூ. 1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, உள்நாட்டு வருமானம் மற்றும் இறக்குமதியின் மூலம் கிடைத்த வருமானத்தின் அதிகரிப்பால், பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 35,204 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 43,704 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 90,870 கோடியாகவும் மற்றும் கூடுதல் வரி ரூ. 13,868 கோடியாகவும் வசூலாகி உள்ளன. இதன்மூலம், மொத்தம் ரூ. 1.84 லட்சம் கோடி வசூலாகி உள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாயில் 11 சதவிகிதம் அதிகரிப்பு இருக்கும் என்றும் அரசு கணித்துள்ளது.
இதையும் படிக்க:இந்தியா: மொபைல் போன் ஏற்றுமதி 40% அதிகரிக்க வாய்ப்பு