மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு
நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?
நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் சரியாக விளையாடாதது குறித்து மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.
லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் சீசன் சரியாக அமையவில்லை. மெகா ஏலத்தில் ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு லக்னௌ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன.
இதையும் படிக்க: 10 கிலோ உடல் எடையைக் குறைத்த சர்பராஸ் கான்!
இருப்பினும், ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 100-க்கும் குறைவாக உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தில்லி கேபிடல்ஸுக்காக அறிமுகமான ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் தொடரே மிகவும் மோசமான ஐபிஎல் தொடராக அமைந்துள்ளது.
மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?
நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்த தவறிய நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் தனக்கு சிறப்பானதாக அமையவில்லை என ரிஷப் பந்த்தான் முதலில் கூறினார் என மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு சீசன் ரிஷப் பந்த்துக்கு சரியாக அமையவில்லை என்பதை அவர்தான் முதலில் கூறினார். ஆனால், கிரிக்கெட்டில் இதுபோன்ற காலக்கட்டங்களும் இருக்கும் என்றே கூறுவேன். ரிஷப் பந்த் மிகவும் அற்புதமான வீரர் என்பது நமக்குத் தெரியும். அவர் மிக அதிக திறமைகளைக் கொண்ட வீரர். அதனால், அவர் விரைவில் மீண்டும் ஃபார்முக்கு வருவார். கடைசி இரண்டு போட்டிகளில் அவர் நன்றாக விளையாடி ரன்கள் குவிப்பார் என நம்புகிறேன்.
இதையும் படிக்க: மாற்றுவீரர்களாக மும்பை அணியில் இணையும் நட்சத்திர பட்டாளம்!
அணிக்காக என்னால் முடிந்த அளவுக்கு பங்களிப்பை வழங்குகிறேன். கடைசி இரண்டு போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி அணிக்கு வெற்றி பெற்றுத் தர விரும்புகிறேன். ஐபிஎல் மிகவும் போட்டி நிறைந்த தொடர். இந்த சீசனில் சில போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடைந்தோம். அந்த தோல்விகள் எங்களுக்கு சிக்கலாக அமைந்துவிட்டது என்றார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.