செய்திகள் :

நடிகர் அஜித் வழியில் கோலி? கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன?

post image

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன? என்ற சுவாரசிய தகவலைப் பகிர்ந்திருக்கிறார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்.சி.பி) அணிக்காக விளையாடுவதற்காக பெங்களூரு சென்றடைந்துள்ள விராட் கோலி அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியிருப்பதாவது: “விளையாட்டை ஊக்குவிக்கும் ஒரு தேசத்தில், ஆடவர்களை மையப்படுத்தி மட்டும் விளையாட்டை வளர்க்க முடியாது. இதனால், மகளிர் கிரிக்கெட் பிரீமியர் லீக் மேலும் வளர்ச்சியடையும்.

2028 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக கிரிக்கெட் இடம்பெற்றால் அப்போது இந்தியா வென்று பதக்கத்துடன் திரும்புவது இந்தியாவுக்கு சிறந்த தருணமாக அமையும்.

அந்த ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், அப்போது, நான் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும், அந்த ஒரேயொரு போட்டியில் விளையாடுவதற்காக மட்டுமாவது எனது ஓய்வு முடிவை திரும்ப்பபெறுவேன்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்பதைக் குறித்து சத்தியமாக எனக்கு தெரியாது. ஆனால், இதே கேள்விக்கான பதிலை அறிய வேண்டி சக வீரர் ஒருவரிடம் இது குறித்து வினவினேன். அப்போது அவரும் இதே பதிலையே தந்தார். ஒருவேளை, நிறைய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வேன்” என்றார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாது, கார், பைக் ரேஸிங் செய்வதுடன், பல்வேறு இடங்களுக்கு அவ்வப்போது சுற்றுலா செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அவரைப் போலவே தமக்கும் பயணம் செய்வது பிடிக்கும் என்று விராட் கோலியும் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.

தில்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன்!

மகளிர் பிரீமியர் லீக்கில் பரபரப்பான இறுதிப் போட்டியில் தில்லி அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டி... மேலும் பார்க்க

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸுக்கு 150 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்று வரும் இறுத... மேலும் பார்க்க

நான் எதுவும் அறிவிக்கவில்லை; ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் நான் வெளியிடப்போவதில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்காக பல ஆண... மேலும் பார்க்க

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுக... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவாரா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார் எனக் கூறப்படுகிறது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளத... மேலும் பார்க்க

“பதற்றமாக இருந்தேன்...” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!

ஐபிஎல் மெகா ஏலத்தின்போது பதற்றமாக இருந்ததாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பிய... மேலும் பார்க்க