Indonesia: நீல நிற கண்களுடன் பிறக்கும் பட்டன் பழங்குடியினர்... அறிவியல் காரணம் எ...
நடிகைக்கு பாலியல் தொல்லை: `புகைப்படத்தைக் காண்பித்து மிரட்டுகிறார்’ - கன்னட சின்னத்திரை நடிகர் கைது
கன்னட தொடரான முத்துலட்சுமி தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமாகி பிஸியாக நடித்து வருபவர் நடிகர் சரித் பாலப்பா. இவர் மீது தொலைக்காட்சித் தொடர் நடிகை ஒருவர் ராஜராஜேஸ்வரி நகர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதில், ``2017 முதல் நடிகர் சரித் பாலப்பாவுடன் நடித்து வருகிறேன். தொழில் ரீதியில் நண்பர்களானோம். நான் கணவரைப் பிரிந்து தனியே வாழ்ந்துவருவதை அறிந்த அவர், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். அவருடன் தனிமையில் இருக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு நான் மறுத்தால் என்னைக் குறித்து அவதூறு பரப்புவதாக மிரட்டுகிறார். நாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து பணம் கேட்டு மிரட்டுகிறார்.
என் மீது பொய் வழக்குப் போடுவதாகவும், சிலமுறை கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். நான் தனியாக இருக்கும்போது சிலருடன் என் வீட்டுக்கு வந்து அநாகரீகமாக நடந்துகொண்டார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில், கன்னட தொலைக்காட்சி நடிகர் சரித் பாலப்பாவை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் கன்னட சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.