கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆனது?
நடிகை ராதிகா உடல்நலப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் உள்பட தென்னிந்திய சினிமா முழுக்க அறியப்பட்டவர் நடிகை ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானவர், தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1980-களில் முன்னணி கதாநாயகியாகவும், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றவர்.
தற்போது, பிரபல நாயகர்களின் தாயாக நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ராதிகா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இன்னும் 4 நாள்களில் ராதிகா வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்!