தூத்துக்குடி மாவட்டத்தில் மினி பேருந்து சேவைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
`நட்பு காதலாக மாறி..!’ - சுஷ்மிதா சென் உடனான உறவு முறிவு; புதிய காதலியை அறிமுகம் செய்த லலித் மோடி
இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் லலித் மோடி. அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வெளியேறி இப்போது லண்டனில் வசிக்கிறார். லலித் மோடி கடந்த 2022ம் ஆண்டு திடீரென தனது சோசியல் மீடியாவில் தான் நடிகை சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறி இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார். அதோடு தன்னில் பாதி என்று சுஷ்மிதா சென்னை லலித் மோடி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதன் பிறகு அவர்களது உறவு என்ன ஆனது என்று தெரியவில்லை. இருவரும் இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேசமயம் சுஷ்மிதா சென் தனது பழைய காதலன் ரோஹ்மன் என்பவருடன் வெளியிடங்களுக்கு செல்ல ஆரம்பித்தார். இப்போது சுஷ்மிதா சென்னை கைவிட்டுவிட்டு புதிய பெண்ணை லலித் மோடி காதலிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/5o6pwh1t/article-l-202524421474678466000.webp)
அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் புதிய காதலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரிமா பெளரி என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தங்களது 25 ஆண்டு நட்பு காதலாக மாறி இருப்பதாக லலித் மோடி குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``எனக்கு இரண்டுமுறை அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. 25 ஆண்டு நட்பு காதலாக மாறும்போது அது நடந்திருக்கிறது. இது இரண்டு முறை நடந்திருக்கிறது. இது உங்கள் அனைவருக்கும் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார். முதல் அதிர்ஷ்டம் என்று அவர் சொல்வது சுஷ்மிதா சென்னை காதலித்ததை சொல்வதாக தெரிகிறது.
லலித் மோடி காதலிக்கும் பெண் லெபனானை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்தியாவை விட்டு வெளியேறிய லலித்மோடிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்து இருக்கிறது. 2018ம் ஆண்டு லலித் மோடியின் மனைவி மினால் காலமாகிவிட்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play