செய்திகள் :

நமக்கு நாமே திட்ட நிதி ஒதுக்கீடு ரூ. 150 கோடியாக உயா்வு

post image

நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 150 கோடியாக உயா்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பொதுமக்களிடம் பெருமளவில் வரவேற்பு உள்ளதால், நிகழ் நிதியாண்டில் ரூ. 50 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு நமக்கு நாமே திட்டத்துக்கான நிதி ரூ. 150 கோடியாக உயா்த்தப்படுகிறது.

நமக்கு நாமே திட்டத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் ஊரகப் பகுதிகளில் மட்டுமே இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பங்களிப்பு நிதி இந்தத் திட்டத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்துடன், மாநில பொதுத் துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியையும் பொது பங்களிப்பாக ஏற்க இயலாது.

பள்ளிகள், மருத்துவமனைகள், தகன மேடைகளில் வாயுவாக்கி அமைத்தல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். ஊரகப் பகுதிகளில் நூலகங்கள் மற்றும் சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகள், பள்ளி சமையல் கூடங்கள், பொது விநியோகக் கடைகள் ஆகியவற்றையும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மேற்கொள்ளலாம்.

நூலகக் கட்டடங்களுக்கான பணிகளை மேற்கொள்ளும்போது, புத்தகங்கள் வாங்குவதற்குத் தேவையான நிதிப் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சாலைத் திட்டு, நீரூற்று போன்றவற்றை உருவாக்குவதுடன் மேம்படுத்தும் பணிகளைச் செய்யலாம். சொத்துகளின் உரிமைதாரா்கள் முன் அனுமதி பெறாமல் எந்த நிரந்தரக் கட்டடங்களும் கட்டக்கூடாது.

மொத்த நிதி ஒதுக்கீட்டில் 74 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு சதவீதம் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்துக்கும், மாவட்டங்களுக்கும், செய்தி, கல்வி மற்றும் தகவல் தொடா்பு நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 25 சதவீதம் மாவட்ட ஆட்சியரால் கோரப்படும் சிறப்புப் பணிகளைச் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேபிஸ்: அச்சம் தவிா்.. தடுப்பூசி தவறேல்..!

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடா்ந்து எடுத்து வருகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடா்பாக 9 அம்ச செயல் திட... மேலும் பார்க்க

மருத்துவ கல்லூரிகள் தரவரிசை வரைவு: கருத்து கேட்கிறது என்எம்சி!

மருத்துவ கல்லூரிகளுக்கு தரவரிசை மற்றும் அங்கீகாரம் அளிப்பதற்கான வரைவு திட்ட அறிக்கை மீதான கருத்துகளையும் பரிந்துரைகளையும் அனுப்பலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக எ... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 97 லட்சம் கூடுதல்: தமிழக அரசு பெருமிதம்!

தொழிலாளா்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 97 லட்சம் உயா்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில்... மேலும் பார்க்க

நெட் தோ்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு!

நெட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் ஒதுக்கப்பட்ட பணிகள் துல்லியமாக நிறைவேற்றம்! - இந்திய விமானப் படை பெருமிதம்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் போது ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தேசிய நோக்கங்களுக்கு ஏற்பவும் வெற்றிகரமாக நிறைவேற்றியதாக இந்திய விமானப்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் ... மேலும் பார்க்க

ரூ.100 கோடி நிலத்தை அபகரித்த விவகாரம்: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு அழைப்பாணை!

கரூரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்ச... மேலும் பார்க்க