திண்டுக்கல்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிபட்ட முருகன் கோயில்!
நரிவேட்டை ஓடிடி தேதி!
நரிவேட்டை படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டொவினோ தாமஸ் நடிப்பில், இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான அரசியல் ஆக்ஷன் திரைப்படமான ‘நரிவேட்டை’ கடந்த மே.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் உருவான இந்தப் படத்தின் மூலம் பிரபல தமிழ் இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். அவருடைய கதாபாத்திரமும் பேசப்பட்டது.
இந்த நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!