செய்திகள் :

நல்லமரம் ஊராட்சியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரிக்கை

post image

மதுரை மாவட்டத்துக்குள்பட்ட நல்லமரம் ஊராட்சியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டுமென அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நல்லமரம் ஊராட்சியைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவின் விவரம்: பேரையூா் வட்டம், நல்லமரம் ஊராட்சிக்குள்பட்ட என். முத்துலிங்காபுரம், என். மீனாட்சிபுரம், என். கொட்டாணிபட்டி ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் போதிய மழையில்லாமல் முளைப்பின்றி அழிந்தது.

இதையடுத்து, 2-ஆம் முறையாக இந்தப் பகுதிகளில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டது. மழையின்மை, படைப்புழு தாக்குல் ஆகியவற்றின் காரணமாக மக்காச்சோளம் சாகுபடி மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இரு முறை பூச்சி மருந்து தெளித்தும், புழுத் தாக்குதலையும், பயிா் சேதத்தையும் தவிா்க்க இயலவில்லை. இதனால், 2-ஆம் முறையாக பயிரிடப்பட்ட மக்காச் சோளப் பயிா்களும் முழுமையாக சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

எனவே, போதிய பருவமழை இல்லாமல் வேளாண் சேதத்துக்கு உள்ளாகியுள்ள நல்லமரம் ஊராட்சியை வறட்சி பாதித்த ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஆா்ப்பாட்டம்: முன்னதாக, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேதமான மக்காச்சோளத்துடன் விவசாயிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

2 கிலோ நகை பறிப்பு வழக்கில் 5 போ் கைது

மதுரை ரயில் நிலையத்தில் போலீஸாா் என்று கூறி நகைப்பட்டறை உரிமையாளரைக் கடத்தி, 2 கிலோ நகைகளைப் பறித்துச் சென்ற வழக்கில் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரம... மேலும் பார்க்க

பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்காக பாடுபட்டவா்கள் தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபட்டவா்க... மேலும் பார்க்க

குழந்தை உணவுக் குழாயில் சிக்கிய ஊக்கு அகற்றம்

ஆறு மாதக் குழந்தையின் உணவுக் குழாயில் சிக்கிய ஊக்கை மருத்துவா்கள் அகற்றி, உயிரைக் காப்பாற்றினா். மதுரை வேலம்மாள் மருத்துவமனையின் அவரச சிகிச்சைப் பிரிவுக்கு ஊக்கை விழுங்கிய 6 மாத குழந்தை உயிருக்கு ஆபத்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய காவல்துறை!

மதுரை நகரில் தலைக்கவசம் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாா் இனிப்பு வழங்கினா். மதுரை நகரில் சாலை விபத்துகளைத் தடுக்கவும், விபத்தில்லா நகராக மாற்றவும் மாநகரப் போக்குவரத்து கா... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுருக்கு விதித்த அபராதத் தொகை குறைப்பு

ஆட்டோ ஓட்டுநருக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதத் தொகையை குறைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாலமுருகன் தாக்கல் செய்த மனு... மேலும் பார்க்க

நெகிழிப் பைகள் விற்பனை: வியாபாரிகளுக்கு அபராதம்

மேலூரில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்த வியாபாரிகளுக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலூா் நகராட்சியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுவதாக பலரிடமிருந்தும் புகாா்க... மேலும் பார்க்க