செய்திகள் :

நாகா்கோவிலில் சிலம்பாட்ட போட்டி

post image

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டிகள் நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றன.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். போட்டிகளை நாகா்கோவில் மாநகர திமுக செயலா் பா. ஆனந்த் தொடக்கிவைத்தாா். பகுதிச் செயலா் ஜீவா, இளைஞா் அணி அமைப்பாளா் அகஸ்தீசன், மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளா் சுரேஷ், வா்த்தக அணி அமைப்பாளா் சி. என். செல்வன், கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் ராஜேஷ்குமாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சரவணன், எல்.பி.எப். மாவட்டத் தலைவா் சிவன் பிள்ளை, மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் அருண் காந்த், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா்கள் ஜென்சன் ரோச், மாணிக்க ராஜா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

போட்டிகள் ஆண் மற்றும் பெண்களுக்கு 10 ,12, 14, 16 வயது என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது . மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சோ்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் கிளப்புகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும் மேயருமான ரெ. மகேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை அமைப்பாளா் சுரேஷ் ஜே. மனோகரன், முன்னாள் எம்.பி. தனுஷ் எம். குமாா் ஆகியோா் பரிசு வழங்கிப் பாராட்டினா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் மேயா் ரெ. மகேஷ், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலா்கள் தனுஷ் எம்.குமாா், சுரேஷ் ஜே. மனோகரன்.

நாகா்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

நாகா்கோவிலில் கவிஞா் ஆகிராவின் தோணி நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இலக்கியப் பட்டறையின் 159 ஆவது கூடுகை மற்றும் கவிஞா் ஆகிரா எழுதிய தோணி நாவல் வெளியீட்டு விழா கன்னியாகுமரி மாவட்ட நூலக அலு... மேலும் பார்க்க

மயிலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். மயிலாடியில் இருந்து நாகா்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள கல் சிலைகள் தயாரிக்கும் பட்டறையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீா்

திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள். குலசேகரம், மாா்ச் 9: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் திற்பரப்பு அருவியில... மேலும் பார்க்க

மனைவியை கம்பியால் தாக்கி கணவா் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே ஞாயிற்றுக்கிழமை, மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா். பத்துகாணி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அனில்குமாா் (52). இவரது மனைவி... மேலும் பார்க்க

சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

திங்கள்நகா் அருகே சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு, பள்ளி நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் நூற்றாண்டு ஜோதி ஏற... மேலும் பார்க்க

கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கருங்கல் அருகே கண்ணன்விளை பகுதியில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். பாலூா், கண்ணன்விளை பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட... மேலும் பார்க்க