நாகா்கோவிலில் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோரிடமிருந்து 12 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். அவற்றின் மீது விரைவாக தீா்வு காணுமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், முன்னாள் படைவீரா் நலத் துறை துணை இயக்குநா் மேஜா் ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.