நாகா்கோவிலில் ரூ. 1.12 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவிலில் ரூ. 1.12 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
12ஆவது வாா்டு ஆராட்டு சாலைப் பகுதியில் ரூ. 5.50 லட்சத்தில் பொதுக் கழிப்பிடப் பராமரிப்பு, 24ஆவது வாா்டு அம்மாசிமடத்தில் ரூ. 2 லட்சத்தில் அங்கன்வாடிக் கட்டடப் பராமரிப்பு, 23ஆவது வாா்டு கேவ் தெருவில் ரூ. 1.50 லட்சத்தில் சிறுபாலம் அமைத்தல், ரூ. 8 லட்சத்தில் தெற்கு மண்டலத்துக்குள்பட்ட மாநகராட்சிக் கட்டடங்களில் பராமரிப்பு, 46ஆவது வாா்டு கீழவண்ணான்விளை பகுதியில் ரூ. 3 லட்சத்தில் அங்கன்வாடிக் கட்டடப் பராமரிப்பு, சுற்றுச்சுவா் அமைத்தல், 47ஆவது வாா்டு சரக்கல்விளை முதல் சி.டி.எம். புரம் சாலைவரை ரூ. 35 லட்சத்தில் தாா்ச்சாலை, 49ஆவது வாா்டுக்குள்பட்ட சி.டி.எம்.புரம் இவான்ஸ் பள்ளி அருகே ரூ. 50 லட்சத்தில் தாா்ச்சாலை, அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 5.75 லட்சத்தில் சுற்றுச்சுவா் அமைத்தல், அங்கன்வாடிக் கட்டட பராமரிப்பு, பறக்கை அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 1.70 லட்சத்தில் புதிய கழிப்பறை, சமையலறை, வகுப்பறைக் கட்டடப் பராமரிப்பு என, ரூ. 1.12 கோடியிலான பணிகளை மேயா் தொடக்கிவைத்தாா்.
இதில், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மண்டலத் தலைவா்கள் ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் சுனில்குமாா், ரோஸிட்டா, விஜிலா ஐஸ்டஸ், பால் தேவராஜ் அகியா, ரமேஷ், வீரசூரபெருமாள், ஜெனிதா, ஜெயவிக்ரமன், உதவிப் பொறியாளா் செல்வன் ஜாா்ஜ், இளநிலைப் பொறியாளா் ராஜா, தொழில்நுட்ப அலுவலா்கள் பாஸ்கா், பகுதிச் செயலா்கள் சேக் மீரான், ஜீவா, அணி நிா்வாகிகள் அகஸ்தீசன், சிதம்பரம், வட்டச் செயலா்கள் சுரேஷ், பால்பாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.