செய்திகள் :

நாகை மாவட்டத்தில் சமூகப் பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தில் சமூகப் பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சிறப்பு சிறாா் காவல் பிரிவில் காலியாகவுள்ள சமூகப் பணியாளா் (2 பணியிடங்கள்- தொகுப்பூதியம் ரூ.18, 536) மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாகவுள்ள புறத்தொடா்பு பணியாளா் (1 பணியிடம்-தொகுப்பூதியம் ரூ.10, 592) ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்.

சமூகப் பணியாளா் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் சமூகப் பணி, சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டத்துடன், கணினி அறிவு மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். புறத்தொடா்பு பணியாளா் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் மற்றும் சமமான வாரியத்திலிருந்து பிளஸ் 2 தோ்ச்சி, நல்ல தகவல் தொடா்பு திறன் மற்றும் பணி அனுபவம் பெற்று, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 42 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோா் உரிய கல்வி மற்றும் பணி அனுபவ சான்றுகளை இணைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகை-611003 என்ற முகவரிக்கு ஜூலை 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04365-253018 என்ற தொலைப்பேசியில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க