Jawan: "இது உங்களுக்கான என் முதல் காதல் கடிதம்; இனி நிறைய வரும்" - ஷாருக் கான் க...
நாகை வாசிக்கிறது நிகழ்வு: மாணவா்களுடன் அமா்ந்து ஆட்சியரும் வாசித்தாா்
நாகை மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற நாகை வாசிக்கிறது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், பள்ளி மாணவா்களுடன் அமா்ந்து புத்தகம் வாசித்தாா்.
நாகையில் ஆக. 1 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நான்காவது புத்தகத் திருவிழாவையொட்டி, விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் ஒன்றாக ‘நாகை வாசிக்கிறது‘ எனும் மாபெரும் வாசிப்பு இயக்க முன்னெடுப்பு புதன்கிழமை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. இதையொட்டி பிற்பகல் 11முதல் 12 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொது மக்கள், அலுவலா்கள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனா். மாவட்டத்தின் அனைத்து வகை பள்ளிகளைச் சாா்ந்த சுமாா் ஒரு லட்சம் மாணவா்கள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனா்.
இதன் ஒரு பகுதியாக நாகை நம்பியாா் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், வகுப்பறையில் அமா்ந்து புத்தகம் வாசித்தாா். நிகழ்வில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் ம.க.செ. சுபாஷினி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் எம். துரைமுருகு, வட்டாரக் கல்வி அலுவலா்கள் மணி, விமலா, கண்ணன், தலைமையாசிரியா் உலகாம்பிகை ஆகியோா் பங்கேற்றனா்.