செய்திகள் :

நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

post image

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறியது குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, வெறும் 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்தும் சிஎஸ்கே வெளியேறியது.

இதையும் படிக்க: இந்திய அணிக்காக விளையாடும் கனவை ஒருபோதும் கைவிடமாட்டேன்: அஜிங்க்யா ரஹானே

மைக்கேல் ஹஸ்ஸி கூறுவதென்ன?

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து வெளியேறியது குறித்து கண்டிப்பாக அச்சமடையப் போவதில்லை என சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மைக்கேல் ஹஸ்ஸி (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது குறித்து கண்டிப்பாக நாங்கள் அச்சமடையப் போவதில்லை. இந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளோம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெறவில்லை. எங்களுக்கு போட்டியை வென்று கொடுக்கும் சில வீரர்கள் கிடைத்துள்ளார்கள். எந்த ஒரு அணிக்கு எதிராகவும் சவாலளிக்கும் விதமாக எங்களால் விளையாட முடியும்.

இதையும் படிக்க: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,000 ரன்கள்..! ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு சில வீரர்களுக்கு இந்த சீசனில் கிடைத்துள்ளது. இது அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. அவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை விடாப்பிடியாக நன்றாக பிடித்துக் கொண்டு அடுத்து சில சீசன்களில் சிஎஸ்கே அணியின் பிரதான வீரர்களாக அவர்கள் மாறுவார்கள் என நம்புகிறேன் என்றார்.

ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த பிரசித் கிருஷ்ணா!

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகி... மேலும் பார்க்க

சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!

ஐபிஎல் தொடரில் சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும... மேலும் பார்க்க

மிடில் ஆர்டரில் அதிரடி..! மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல் தனது அதிரடியான பேட்டிங் குறித்து பேட்டியளித்துள்ளார். இந்தாண்டு தொடர்ச்சியாக நம்.3 இடத்தில் தேவ்தத் படிக்கல் களமிறங்குகிறார். விராட் கோலி தொடக்க வீரராக மாறியதால் இந்த இட... மேலும் பார்க்க

நடுவர்களுடன் வாக்குவாதம் ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்!

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் நடுவருடன் ஷுப்மன் கில் வாகுவாதம் செய்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அகமதாபாத் திடலில் நடந்த நேற்றைய (மே.2) போட்டியில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 224/6 ரன... மேலும் பார்க்க

வென்றது குஜராத்; வெளியேறியது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடு... மேலும் பார்க்க

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அதிரடி: சன்ரைசர்ஸுக்கு 225 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட... மேலும் பார்க்க