செய்திகள் :

'நாங்க மட்டும் சும்மாவா?' அமெரிக்கா மீது வரி விதித்த சீனா; 'பயந்துவிட்டனர்' எச்சரிக்கும் ட்ரம்ப்!

post image

'ட்ரம்ப்பின் பரஸ்பர வரி' - இது தான் பொருளாதார உலகின் தற்போதைய‌ ஹாட் டாப்பிக்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமைதி காத்திருந்தாலும், சீனா ட்ரம்ப்பின் வரி கொள்கைக்கு அதிரடி காட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்பட்ட அமெரிக்க பரஸ்பர வரி பட்டியலில், சீனப் பொருட்கள் மீது 34 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த வரி வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

முதலில் அமெரிக்கா; அடுத்து சீனா - மாற்றி மாற்றி வரி விதித்து கொள்ளும் இரு நாடுகள்!
முதலில் அமெரிக்கா; அடுத்து சீனா - மாற்றி மாற்றி வரி விதித்து கொள்ளும் இரு நாடுகள்!

சீனாவின் எதிர்வினை

இதற்கு எதிர்வினையாற்றி உள்ளது சீனா. நேற்று, சீனாவின் நிதி அமைச்சகம், "சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களின் மீது 34 சதவிகித வரி விதிக்கப்படும். இது வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது" என்று அறிவித்துள்ளது.

ட்ரம்ப்பின் பதில்

சீனாவின் இந்த வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், "சீனா தவறு செய்துவிட்டார்கள். அவர்கள் பயந்துவிட்டனர். அது தான் அவர்களால் கடைசிக்கு செய்ய முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.

`விசைத்தறி தொழில் முடங்கும் பேராபத்து; கொங்கு மண்டல வாழ்வாதாரம் பாதிக்கிறது...!' - சீமான்

ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து விசைத்தறியாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழ்நாடு அரசை சீமான் கண்டித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ... மேலும் பார்க்க

``அடுத்த குறி கிறிஸ்தவர்கள் மீதுதான்..." - எச்சரிக்கும் ராகுல் காந்தி

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதாவை 2025 பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது. ``சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் தலையிட்டு அ... மேலும் பார்க்க

"இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்" - பிரதமர் மோடி

பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க முன்னிலையில் இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையேயான சில முக்கிய... மேலும் பார்க்க

'மீனவர்கள் பிரச்னைக்கு மோடி தீர்வு காண வேண்டும்' - தொல்.திருமாவளவன்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், காட்டத்தூரில் உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாள... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் பயணம் : யாத்திரை, சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடு என்ன? | முழு தகவல்

ஆங்கிலேயர் காலத்தில் நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்க கட்டப்பட்டது பாம்பன் ரயில் பாலம். 111 ஆண்டுகளை கடந்த பாலம் கடல் அரிப்பின் காரணமாக வலு இழந்தது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட... மேலும் பார்க்க