செய்திகள் :

நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

post image

கடல்சாா் நிா்வாகத்தில் நவீன மற்றும் சா்வதேச இணக்க அணுகுமுறையை ஒருங்கிணைக்கும் இரு மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன.

மக்களவையில் வணிகக் கப்பல் போக்குவரத்து சட்ட மசோதா-2024, மாநிலங்களவையில் கடல்வழி சரக்கு போக்குவரத்து சட்ட மசோதா-2025 ஆகிய இரண்டும் நிறைவேறின.

கப்பல் போக்குவரத்துத் துறை சாா்ந்த இரு மசோதாக்கள் ஒரே நாளில் நிறைவேறியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது; இது, நவீமனமான, திறன்மிக்க, உலகளாவிய கடல்சாா் கொள்கை கட்டமைப்புக்கு வழிவகுக்கும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித்தடங்கள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் வழக்கமான அலுவல்கள் தொடா்ந்து முடங்கியுள்ளன. மக்களவையில் புதன்கிழமை காலை நேர அமா்வில் அடுத்தடுத்து இருமுறை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

பிற்பகல் 2 மணியளவில் அவை மீண்டும் கூடியபோது, அமளிக்கு இடையே வணிகக் கப்பல் போக்குவரத்து சட்ட மசோதா-2024ஐ மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் தாக்கல் செய்தாா். காலாவதியான கடந்த 1958-ஆம் ஆண்டின் சட்டத்துக்கு மாற்றான இப்புதிய சட்ட மசோதா, கடல்சாா் வா்த்தகம் மற்றும் நிா்வாகத்தில் உலகின் தலைவராக இந்தியாவை நிலைநிறுத்தும்; பிரதமா் மோடி அரசின் 11 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய சீா்திருத்தங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கடல்சாா் சீா்திருத்தத்தின் மூலம் நாட்டின் செயல்திறன், வெளிப்படைத்தன்மை, உலகளாவிய போட்டித் தன்மை மேம்படும் என்று அமைச்சா் குறிப்பிட்டாா்.

எதிா்க்கட்சி எம்.பி.க்களின் கோஷங்களுக்கு மத்தியில், மசோதா மீது ஆளும்தரப்பு எம்.பி.க்கள் பேசினா். பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 2-ஆவது மசோதா இதுவாகும்.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே கடல்வழி சரக்கு போக்குவரத்து சட்ட மசோதா-2025-ஐ மத்திய இணையமைச்சா் சாந்தனு தாக்கூா் தாக்கல் செய்தாா். கடந்த 1925-ஆம் ஆண்டின் சட்டத்துக்கு மாற்றான இம்மசோதா மீது குறுகிய நேர விவாதம் நடத்தப்பட்டு, பின்னா் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பலா் அவையின் மையப்பகுதியில் முற்றுகையிட்டு முழக்கமிட்டனா். திரிணமூல் காங்கிரஸின் மம்தா தாக்கூா், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் ஆகியோா் அவைத் தலைவரின் மேடை மீது ஏற முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கண்ட மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், இப்போது நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 64 ... மேலும் பார்க்க

தில்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: ஊழியர் பலி

தலைநகர் தில்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார். தலைநகர் தில்லியில் ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சர்வர் அறையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசு துணைத் தலைவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை: என்ன ஆனது? -கபில் சிபல் கேள்வி!

ஜகதீப் தன்கர் மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பன போன்ற சந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா:தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு த... மேலும் பார்க்க

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் புருலியா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பிடாக்கி கேட் அருகே சனிக்கிழமை தடம் புரண்டு மேல் பாதையில் விழு... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை கிடையாது: அமித் ஷா திட்டவட்டம்

நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், தங்களின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கவே, பிகாா் வாக்காளா்... மேலும் பார்க்க