செய்திகள் :

நாடோடியாகத் திரிந்த முதியவரை மீட்டு, கேரளாவில் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த காவலர்!

post image

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ரெங்கராஜன். இவர் கடந்த 25.01.2025-ந் தேதி காலை 8 மணிக்கு பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது சாலையின் ஓரத்தில் முதியவர் ஒருவர், கிழிந்த ஆடைகளுடன் சோர்ந்து கிடப்பதை பார்த்த அவர், தனது டூவீலரை நிறுத்திவிட்டு முதியவரிடம் சென்று நலம் விசாரித்தார். அப்போது, தனது பெயர் முரளி, கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவன். நாடோடியாக திரிந்து வந்த நான் தற்போது இந்த ஊருக்கு வந்து சிக்கிக் கொண்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து பேசிய ரெங்கராஜன், 'இப்போது சொந்த ஊருக்கு திரும்ப அனுப்பி வைத்தால் செல்வீர்களா? உங்களுக்கு சம்மதமா? என கேட்கவும் முதியவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

முரளி

இதையடுத்து அவரை குளிக்க வைத்து புதிய ஆடை மற்றும் உணவு வாங்கிக்கொடுத்து முதியவரை மாற்றினார். தொடர்ந்து அவரின் உடமைகளை சோதனை செய்தபோது, முதியவர் கோட்டயம் முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து முட்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து பேசினார். அப்போது முதியவர் முரளி வெள்ளூர் வட்டத்தை சேர்ந்தவர், அவர் காணாமல் போய் ஒன்றரை வருடம் ஆகிவிட்டது என்றும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் தமிழ்நாட்டில் ஆவியூர் அருகே ஆதரவற்று இருப்பதை தெரியப்படுத்திய காவலர் ரெங்கராஜன், சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.

அதன்படி, தனது டூவீலரில் முதியவர் முரளியை திருமங்கலத்திற்கு அழைத்துச் சென்ற ரெங்கராஜன், திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து தேனி செல்லும் பேருந்தில் முதியவருக்கு பயணச்சீட்டு வாங்கி கொடுத்ததுடன், தேனியிலிருந்து அவரை கேரளா மாநிலம் கோட்டயம் செல்லும் பேருந்தில் ஏற்றிவிடுமாறு நடத்துனரிடம் கேட்டுக்கொண்டார். மேலும் முதியவரின் வழிச்செலவுக்காக அவரிடம் 500 ரூபாயை கொடுத்து வாஞ்சையுடன்‌ நடந்துகொண்டார். தொடர்ந்து, நன்பகலில் தொடர்பு கொண்ட போலீஸார், முதியவர் முரளி தற்போது எங்கிருக்கிறார் என விவரம் கேட்டனர்.

முரளி

அவர் பூம்பாறை வந்து சேர்ந்திருப்பதாக தகவல் தெரிவிக்கவும், கேரளா போலீசார் முரளியை பூம்பாறையில் மீட்டு கோட்டயம் செல்லும் பேருந்தில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து முரளி கோட்டயம் சென்றடைந்த பின்பு கேரள போலீஸார் அவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். முதியவர் முரளி வீடு சென்று சேர்ந்ததையடுத்து, கேரளா போலீஸாரும் அவரின் குடும்பத்தினரும் ரெங்கராஜனுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

``வலி இருக்கத்தான் செய்யும் அதுக்காக வயித்த பட்டினி போட முடியாதுலா!"- மாற்றுத்திறனாளி ஆறுமுக கண்ணன்

தென்காசியில் ஒரு கால் செயல்படாத மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னம்பிக்கையோடு சைக்கிள் மிதித்து பால் வியாபாரம் செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி வருவதை அறிந்து மாலை நேரத்தில் அவரை சந்திக்கச் செல்லும்போது வய... மேலும் பார்க்க

''அவங்க பணத்துக்காக வெட்டுனாங்க; அதனால மன்னிச்சுட்டேன்'' - ஹீரோ ஆஃப் பல்லாவரம் எப்படியிருக்கிறார்?

2003, மே 27-ம் தேதி. வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு பேப்பர் படித்தபடி காபி குடித்துக்கொண்டிருந்தவரிடம் 'நீ தானா சந்தானம்' என்று கேட்கிறார்கள் சிலர்.அவர் `ஆமாம்' என்று தலையாட்டும்போதே முதுகுக்குப் பின்ன... மேலும் பார்க்க

China: `2 மாதத்தில் ரூ.22 லட்சம்..' -விமான வேலையை உதறிவிட்டு பன்றி வளர்ப்பில் இறங்கிய 27 வயது பெண்!

சீனாவில் (China) 27 வயது இளம்பெண், தான் பார்த்து வந்த விமான பணிப்பெண் வேலையை உதறிவிட்டு பன்றி வளர்ப்பில் இறங்கி இரண்டு மாதங்களில் ரூ. 22.8 லட்சம் சம்பாதித்திருக்கிறார்.சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP... மேலும் பார்க்க

``5 உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்'' -உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது: 66). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி சோமவள்ளி என்கின்ற பாப்பாத்தி (வயது: 49). கடந்த வாரம் சோமவள... மேலும் பார்க்க

வேலூர்: மூளைச்சாவடைந்த இளைஞர்... இறந்தும் 6 பேருக்கு மறு வாழ்வு - நெகிழும் உறவினர்கள்!

பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் வேலை செய்து வந்தார் அருள் (வயது 24). இவர் பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த 14-ம் தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கிராமத்திற... மேலும் பார்க்க