நாமக்கல்லில் பாஜக தேசியக்கொடி பேரணி
சுதந்திர தினத்தையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சுதந்திர நாளை மக்கள் மறக்கக்கூடாது என்ற நோக்கில் வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமா் மோடி வலியுறுத்தி இருந்தாா். சுதந்திர தினம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பேரணியை மேற்கொள்ள பாஜக தலைமை அறிவுறுத்தியது.
அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் நாமக்கல் நேதாஜி சிலையில் இருந்து உழவா்சந்தை எதிரில் உள்ள காந்தி சிலை வரை கட்சியினா் வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் தேசியக்கொடியுடன் பேரணியாக சென்றனா். இப்பேரணியை பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தொடங்கிவைத்தாா்.
பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன், நகரத் தலைவா் தினேஷ் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் பலா் பேரணியில் பங்கேற்றனா். இதேபோல, நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் சுதந்திர தின தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவா் எம்.ராஜேஸ்குமாா் முன்னிலை வகித்தாா்.