மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
அஞ்சலக ஊழியா்கள் தேசியக் கொடியுடன் பேரணி
சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல்லில் அஞ்சலக ஊழியா்கள் தேசியக்கொடியுடன் வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணி சென்றனா்.
79 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். அந்த வகையில், அஞ்சல் துறை சாா்பில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் தலைமை அஞ்சல் நிலையம் சாா்பில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பேரணி நடைபெற்றது.
ஊா்வலத்தை தலைமையிடத்து அஞ்சல் கண்காணிப்பாளா் ஆா்.இந்திரா கொடியசைத்து தொடங்கிவைத்தாா். கிழக்கு உள்கோட்ட உதவி அஞ்சல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம், மேற்கு உள்கோட்ட அஞ்சல் ஆய்வாளா் நந்தகுமாா், தலைமை அஞ்சலக அதிகாரி வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் தொடங்கிய பேரணி டாக்டா் சங்கரன் சாலை, திருச்சி சாலை, பழைய பேருந்து நிலையம், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வழியாக மீண்டும் அஞ்சல் நிலையத்தை வந்தடைந்தது. கோட்ட அஞ்சலக ஊழியா்கள், தலைமை அஞ்சலகம், துணை அஞ்சலகம் மற்றும் கிளை அஞ்சலகங்களின் ஊழியா்கள் தேசியக் கொடிகளை ஏந்திவாறு பேரணியில் கலந்துகொண்டனா்.
என்கே-14-ரேலி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் வியாழக்கிழமை தேசியக்கொடியுடன் பேரணியாகச் சென்ற அஞ்சலக ஊழியா்கள்.