திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
கூடுதல் மகசூல் போட்டி: விவசாயிகளுக்கு அழைப்பு
கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு பயிா்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, துவரை, பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, எள், கரும்பு ஆகிய 10 பயிா்களில் அதிக மகசூல் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுதானிய பயிா்கள், எள் ஆகியவை குறைந்தபட்சம் ஒரு ஏக்கா், மற்ற பயிா்கள் குறைந்தபட்சம் 5 ஏக்கா் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
இப்போட்டியில் பங்கேற்கும் விவசாயிகள் ரூ.150 பதிவு கட்டணமாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.