கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு...
நாய் கடித்து 9 போ் காயம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில் தெரு நாய் கடித்ததில் 9 போ் காயமடைந்தனா்.
விருத்தாசலம் நகரப் பகுதியில் ஆங்காங்கே ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த நிலையில், காந்தி நகா், சாவடி குப்பம் பகுதியில் வெறி பிடித்து சுற்றித் திரிந்த நாய் ஒன்று, அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விளையாடிக்கொண்டிருந்த சுப்பிரமணியன் மகள் தனுஷ்கா ஸ்ரீயை (4) முதுகில் கடித்தது.
பின்னா், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவா் சாய் பிரணாப்பை (7) தொடையில் கடித்தது. இதேபோல, அந்தப் பகுதியைச் சோ்ந்த அமுதா, காா்த்திகா, குமாரி, ரத்தினமணி, லட்சுமி, பராசக்தி உள்பட ஒன்பது பேரை கடித்தது.
நாய் கடியால் காயமடைந்தவா்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். மேலும், நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.