நாளை ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏற்பாடு
ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சாந்தோம் கடற்கரை பின்புறம் உள்ள நொச்சிக்குப்பம் கடற்கரையில் காலை 4.30 மணி முதல் 9 மணி வரை, தர்ப்பணத்துக்குத் தேவையான அனைத்து பொருள்களும் கோயில் சார்பில் இலவசமாக வழங்கப்படும். அதை வழிநடத்த சிவசங்கரன் (உண்ணிகிருஷ்ணன்) புரோஹிதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தகவல்களுக்கு 044 - 28171197, 2197, 3197 ஆகிய தொலைபேசி எண்களிலும், 96770 03633, 94442 90707, 88079 18811/22/55 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கோயில் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.