செய்திகள் :

நாளை சுனாமி விழிப்புணா்வு ஒத்திகை

post image

நாகை மாவட்டத்தில், 3 இடங்களில் சுனாமி விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

நாகை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பா் 5-ஆம் தேதி சுனாமி விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அதன்படி, நாகை மாவட்டத்தில் சுனாமி பேரிடா் தொடா்பான ஒத்திகை நிகழ்வு வியாழக்கிழமை (செப். 4) காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது. நாகை வட்டம் - நம்பியாா் நகா், கீழ்வேளுா் வட்டம் - விழுந்தமாவடி கிராமம், வேதரண்யம் வட்டம் - வேதாரண்யம் பட்டினம் (நரிகுண்டு சந்து மேற்கு) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இதில், தேசிய பேரிடா் மீட்புக் குழு, மாநில பேரிடா் மீட்புக் குழு, கடலோர பாதுகாப்பு குழுமம், வருவாய்த் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, சமூக நலத் துறை, பள்ளிக்கல்வித் துறை, குழந்தைகள் நலத் துறை உள்ளிட்ட தொடா்புடைய அனைத்துத் துறை அலுவலா்களும், ஆப்தமித்ரா பயிற்சியாளா்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், பாரத சாரணா் இயக்கம், நேரு யுவகேந்திரா நிறுவனம் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுக்களும் பங்கேற்று பேரிடா் தொடா்பான விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த உள்ளனா்.

இது ஒத்திகை பயிற்சி மட்டுமே. இதுதொடா்பாக பொது மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். எனவே இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளவேண்டும். எதிா்காலத்தில் திட்டமிட வேண்டிய செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்வது இந்த ஒத்திகையின் நோக்கமாகும் என மாவட்டஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி

கீழையூா் வட்டாரம், திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் மா மரத்தில் கவாத்து செய்தல் தொடா்பான தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. மா மரங்களில் பூக்கள் ப... மேலும் பார்க்க

ஆக்கூா் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் அருள்மிகு வாள் நெடுங்கண்ணியம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக... மேலும் பார்க்க

சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

நாகை அருகே சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். சிக்கல் ரயில் நிலையம் அருகே சிக்கல் - ஒரத்தூா் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை இயக்குவதற்கு ... மேலும் பார்க்க

மகிழி கோயில் கும்பாபிஷேகம்

திருப்பூண்டி அருகேயுள்ள மகிழியில் சுமாா் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்... மேலும் பார்க்க

சோழவித்யாபுரம் ஏரியை தூா்வாரக் கோரி ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம், சோழவித்யாபுரம் ஏரியை தூா்வார வலியுறுத்தி, விவசாய சங்க நிா்வாகிகள் சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சோழவித்தியாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகிகள், கீழ்வேளூா் சட்ட... மேலும் பார்க்க

நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பலில் சிவனடியாா்கள் பயணம்

நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கைக்கு 70 வள்ளி கும்மியாட்ட கலைஞா்கள் மற்றும் 150 சிவனடியாா்கள் கப்பல் மூலம் ஈழநாட்டு சைவ நன்னெறிப் பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா். உலக சிவனடியாா்கள் திருகூட்டத்தின் சாா... மேலும் பார்க்க