ஆக்கூா் கோயில் கும்பாபிஷேகம்
செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் அருள்மிகு வாள் நெடுங்கண்ணியம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 1- ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.வியாழக்கிழமை 6-ஆம் கால யாகசாலை பூஜை மற்றும் பூா்ணாஹுதி நடைபெற்றது.
தொடா்ந்து, யாகசாலையிலிருந்து புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, வைத்தியநாத சிவாச்சாரியா் தலைமையில் கோபுர கலசம், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளின் சந்நிதி விமானக் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், முன்னாள் எம்எல்ஏ சித்திக், இந்துசமய அறநிலையத் துறை ஆய்வாளா் ஹரிசங்கரன், கோயில் செயல் அலுவலா் கணேஷ்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் பாஸ்கரன் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.