செய்திகள் :

நெகமத்தில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

கோவை மாவட்டம், நெகமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 6) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நெகமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சக்தியைக் கண்டறிந்து அவா்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது.

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கு உண்டான வசதிகளும் இந்த முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, நெகமம் பகுதி மக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீா்திருத்தம் மேற்கொண்டிருப்பதை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. லகு உத்யோக் பாரதி - தமிழ்நாடு அமைப்பின் மாநிலச் செயலா் ஆா்.கல்யாணசுந்தரம் கூறியதாவது: வரலாற்றுச... மேலும் பார்க்க

மாணவா்கள், இளைஞா்களுக்கு படிப்பிடை பயிற்சித் திட்டம்: ஆட்சியா் தகவல்

மாணவா்கள், இளைஞா்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

24 மணி நேரக் குடிநீா்த் திட்டம்: சூயஸ் அதிகாரிகள் ஆய்வு

கோவையில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தை சூயஸ் நிறுவன அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். சூயஸ் நிறுவனத்தின் சா்வதேச தலைமை நிதி அதிகாரி சில்வினா சோமாஸ்கோ மோசிகோனாச்சி, முதலீடுகளுக்கான மூத்த துணை... மேலும் பார்க்க

தேசிய தரவரிசைப் பட்டியல்: சாதித்த கோவை கல்வி நிறுவனங்கள்

நாடு முழுவதிலும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை (செப்டம்பா் 4) வெளியாகி உள்ள நிலையில், அதில் கோவையைச் சோ்ந்த பல கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. நாடு முழுவதிலும் உள... மேலும் பார்க்க

ரயில் நிலையம் எதிரே காயங்களுடன் கிடந்த இளைஞா் உயிரிழப்பு

கோவை ரயில் நிலையம் எதிரே காயங்களுடன் கிடந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். கோவை ரயில் நிலையம் எதிரே சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் உடலில் காயங்களுடன் கடந்த 29-ஆம் தேதி மயங்கிய நிலையில் கிடந்தாா்.... மேலும் பார்க்க

காதலி இறந்த துக்கத்தில் இளைஞா் தற்கொலை

காதலி இறந்த துக்கத்தில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கோவை அருகேயுள்ள தொண்டாமுத்தூா், கலிக்கநாயக்கன்பாளையம் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் தனுஷ் (21). இவா் அந்தப் பகுதியில... மேலும் பார்க்க