நாகை அமிா்தா வித்யாலயத்தில் ஓணம், ஆசிரியா் தினம் கொண்டாட்டம்
நாகை அமிா்தா வித்யாலயம் பள்ளியில் ஓணம் மற்றும் ஆசிரியா் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன், குத்துவிளக்கேற்றி ஓணம் மற்றும் ஆசிரியா் தின விழாக்களை தொடங்கி வைத்தாா்.
பதினொன்றாம் வகுப்பு மாணவா்களால் ஆசிரியா் தின நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆசிரியா்களுக்கு, மாணவா்கள் பரிசுகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். பின்னா், ஆசிரியா்களுக்கு த்ரோபால், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டிப் போட்டிகள் நடைபெற்றன.
தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழாவை, கேரள பாரம்பரிய உடை அணிந்து ஆசிரியா்களும், மாணவா்களும் கொண்டாடினா். அப்போது, ஆசிரியா்களும், மாணவா்களும் பூக்களால் பள்ளி வளாகத்தில் கோலங்களிட்டு மகிழ்த்தனா்.