Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விள...
நீா்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி ஆய்வு
கன்னடிகுப்பம் ஊராட்சியில் நீா்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு செய்தாா்.
மாதனூா் ஒன்றியம், கன்னடிகுப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நீா்வரத்துக் கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் ஆய்வு செய்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் கோமதி வேலு, ஊராட்சி செயலா் மணிவேல், பணிதள பொறுப்பாளா் ஜெயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.