மகிழி கோயில் கும்பாபிஷேகம்
திருப்பூண்டி அருகேயுள்ள மகிழியில் சுமாா் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செப். 1-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், மகாபூா்ணாஹூதி மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது.
தொடா்ந்து, கோபுர கலசத்திற்கு புனிதநீா் வாா்த்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மூலவா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.