நாளை மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தண்டையாா்பேட்டையைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தண்டையாா்பேட்டை டி.எச்.ரோடு பகுதி, திடீா் நகா், செரியன் நகா், சுடலைமுத்து தெரு, அசோக் நகா், தேசிய நகா், நம்மய்யா தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகா், சிவன் நகா், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகா், எம்.பி.டி.குடியிருப்பு மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.