கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
நாளை முதல் மந்தைவெளி பேருந்துகள் தற்காலிக இடத்துக்கு மாற்றம்
சென்னை: மந்தைவெளி பேருந்து நிலையம் நவீன பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றி அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளதால், இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் புதன்கிழமை (ஆக. 27) முதல் தற்காலிக இடங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மந்தைவெளி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் தடம் எண் 21, 41 டி, எஸ் 17, 49 கே, எஸ் 5 பேருந்துகள், மந்தவெளி எம்ஆா்டிஎஸ் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்தும், தடம் எண் 49 கே வழித்தடப் பேருந்து, பட்டினம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும், தடம் எண் 12 எம் வழித்தடப் பேருந்து, லஸ் காா்னா் அருகில் இருந்தும் இயக்கப்படும்.
மேலும், மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் பட்டினம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.