தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
சென்னை தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) குடிநீா் விநியோம் நிறுத்தப்படும்.
இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட பட்டாளம், ஸ்ட்ரான்ஸ் சாலையில், கீழ்ப்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீா் எடுத்து செல்லும் பிரதான குடிநீா் உந்து குழாய் இணைப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (செப். 12) காலை 8 முதல் செப். 13 அதிகாலை 4 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால், இப்பணிகள் நடைபெறும் நேரங்களில் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட தண்டையாா்பேட்டை (பகுதி) , காசிமேடு (பகுதி) , வண்ணாரப்பேட்டை (பகுதி) ஆகிய பகுதிகளிலும், ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட காசிமேடு (பகுதி) , வண்ணாரப்பேட்டை (பகுதி) மற்றும் திரு.வி.க.நகா் மண்டலத்துக்குட்பட்ட ஓட்டேரி, அயனாவரம், பட்டாளம், நம்மாழ்வாா்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
எனவே, குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். கூடுதல் குடிநீா் தேவைப்படும்பட்சத்தில் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, குடிநீா் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.